தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (64)

இளஸ்... மனஸ்... (64)

இளஸ்... மனஸ்... (64)


PUBLISHED ON : அக் 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ்...

தனியார் ரத்த பரிசோதனை கூடத்தில், தொழில் நுட்ப வல்லுனராக பணிபுரிகிறேன். கணவர் பிசியோ தெரபிஸ்ட். மகளுக்கு, 4 வயதாகிறது; அவளது நடவடிக்கைகள் இயல்புக்கு மீறியதாய் இருக்கின்றன.

எப்போதும், உதிர்ந்து கிடக்கும் தலைமுடியை தின்கிறாள்; கையில் எந்த பொருள் கிடைத்தாலும் மென்று துப்புகிறாள்.

விரல் நகங்களை எலி போல் கொறிக்கிறாள்; இடது கையை இரு தொடைகளுக்கிடையே வைத்து குப்புற துாங்குகிறாள். கண்களை சிமிட்டுகிறாள்; உதடுகளை கோணி வலிப்பம் காட்டுகிறாள். உடம்பை ரப்பர் போல் நெளிக்கிறாள்.

குழந்தை நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனைக் கேட்டேன்.

'பெரிதாய் எந்த பிரச்சனையும் இல்லை...' என்றார்.

ஆனாலும், மிகவும் பயமாய் இருக்கிறது; செய்வதறியாது தவிக்கிறேன். இந்த பிரச்னையை சரி செய்ய நல்ல ஆலோசனை வழங்கவும்.

பிரியமுள்ள அம்மா...

மகளுக்கு இருப்பது உடல் ரீதியான நோயல்ல; மன ரீதியான, 'அப்சசிவ் கம்ப்ல்சிவ் டிசாடர்' என்ற நோய். தமிழில், மனதை அலைக்கழிக்கும் சீர்கேடு எனலாம்.

மரபு ரீதியான மனநோயாக கூட இருக்கலாம்; ஆட்டிசம் பாதிப்பின் சில அறிகுறிகளும் தெரிகின்றன.

தலைமுடியை சதா உருட்டி விளையாடுவதை, 'ட்ரை கோபேஜியா' என்பர்; தலைமுடியை தின்பதை, 'ட்ரை கோடில் லோ மேனியா' என்பர்.

தலைமுடியை அதிகம் தின்றால் வயிற்றுப் புண் ஏற்படும்; சிறுகுடல் அடைப்பால் மரணம் கூட சம்பவிக்க வாய்ப்பு உண்டு. இதை, 'ராபென்சல் சின்ட்ரோம்' என்பர்.

கீழ்க்கண்ட உபாயங்களை மேற்கொண்டு, இந்த பாதிப்பிலிருந்து மகளை பாதுகாக்கலாம்.

* துாங்கும் போது கை விரல்களை கட்டி, உறை அணிவிக்கலாம்

* தலை முடியை உருட்டாமல், தின்னாமல் தடுக்க, சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவற்றை பரிசாக தரலாம்

* தலைமுடியை ஈரப்படுத்தினால், உருட்டவோ, தின்னவோ முடியாது

* தாத்தா, பாட்டி, பக்கத்து வீட்டு அத்தை, மாமாவை அறிவுரை கூற சொல்லலாம்

* தலை கேசத்தை, 'மசாஜ்' செய்து விடலாம்

* முடியை தொடர்ந்து தின்றால், வழுக்கை ஆகி விடுவாய் என பயமுறுத்தலாம்

* தினமும், இருமுறை தலைக்கு எண்ணெய் வைத்து தலைவாரி விடலாம்

* தலைமுடிக்கு பெயர் வைத்து அழைக்கலாம்; அதாவது, 'அலமேலுவை தின்னாதே... அர்ச்சனாவை தின்னாதே...' என கிண்டலாக கூறலாம்

* விரல்களுக்கு நறுமணம் பூ, லோஷன் அல்லது ஜெல் தடவலாம்

* மிக நீண்ட நேரம் குளிக்க வைக்கலாம்

* தலை கேசத்தை பற்றிய உடற்கூறியலை வர்ணிக்கலாம்

* தலையில் குல்லாய் அணிவிக்கலாம்

* நாய், பூனையை வீட்டில் வளர்க்கலாம்

* பொம்மைகளை விளையாடக் கொடுத்து கவனத்தை திருப்பலாம்

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொட்டை போடலாம்

* மனநல ஆலோசகர் ஆலோசனைப்படி நடத்தை மாற்றும் தெரபி கொடுக்கலாம்

* படுக்கை நேரத்தில் தேவதை கதைகளை கூறலாம்

* கை, கால், விரல் நகங்களை அடிக்கடி சீர்படுத்தலாம்

* மனதை அமைதிப்படுத்தும் விதத்தில் குழந்தை பாடல்களை ஒலிக்க விடலாம்

* தலைமுடியை தொடாமல் இருக்கும் போது மனதார பாராட்டலாம்

தொடர் முயற்சியால், மகளின் கெட்ட பழக்க வழக்கங்கள் தலைதெறிக்க ஓடி விடும்.

- கனிவுடன், பிளாரன்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us