sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்...

/

இளஸ் மனஸ்...

இளஸ் மனஸ்...

இளஸ் மனஸ்...


PUBLISHED ON : ஏப் 15, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 15, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலோ... ஜெனிபர் ஆன்டி. நான் பெங்களூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். தவறாமல் சிறுவர்மலர் இதழ் படிக்கிறேன். ஸோ, என்னோட பிரச்னைக்கு பதில் சொல்லுங்க ஆன்டி.

'கோ-எட்.,' பள்ளியில் படிக்கிறேன். மாணவர்களுடன் சகஜமாக தொட்டுப்பேசி பழகுவோம். அவர்களும் எங்கள் நடுவில் உட்கார்ந்து அரட்டை அடிப்பர். 'பாய்ஸ்' எங்கள் தோளில் கை போட்டு பழகுவர். எல்லா மாணவ, மாணவிகளும் இப்படித்தான் பழகுவோம்.

'இது தப்பு... 'பாய்ஸ்' கிட்டே, 'டச்' பண்ணி பேசாதேன்னு' எங்கம்மா சொல்றாங்க.

எப்பவும், 'பாய்ஸ்' கிட்ட பேசும்போது இடைவெளி இருக்கணும். 'டச்சிங்...' கூடாதுன்னு அம்மா சொல்றாங்க... இவங்க சரியான, 'ஓல்ட் டைப்' ஆ இருக்காங்க... அந்த காலத்து பழக்கத்தை இந்த காலத்துல எதிர் பார்த்தா முடியுமா ஆன்டி? எனக்கு ரொம்ப கோவம்

கோவமாக வருது...

நீங்க சொல்லுங்க ஜெனிபர் ஆன்டி... எது சரி, எது தப்புன்னு! நான் எது சரின்னாலும் ஏத்துக்கறேன் ஆன்டி.

ஹாய்... செல்லம்... சரியான டவுட் கேட்ட... உன்னை பாராட்டுறேன். இந்த டச்சிங் மேட்டர்... கொஞ்சம், 'ரிஸ்க்' ஆனது பேபி. எப்பவுமே, 'பாய்ஸ் - கேர்ள்ஸ்' ரெண்டு பேருமே எதிர் வினைகள்தானே... 'ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்' பண்ணுவது இயற்கை. இந்த, 'டச்சிங்' என்ற பெயரில் ஆரம்பிக்கும் உறவுகள் வேறு மாதிரி ஆபத்தான உறவுகளில் கொண்டு போய் விட்டுவிடும். இதைத்தான் உங்க, 'மம்மி' சொல்றாங்க. அவங்க சொல்றதுல எந்த தப்பும் இல்ல. இளம் வயசுல எத்தனை பேர் கெட்டுப் போறாங்க தெரியுமா? 'நண்பர்கள்' என்ற பெயரில் ஆண் பிள்ளைகளுடன் சகஜமாக பழகுறீங்க... அவங்க செல்போனில் கண்டதை காண்பித்து, மாணவிகளைத் தூண்டி ஆபாசப்படம் எடுத்து விடுகின்றனர். அதை, 'வாட்ஸ்-ஆப்'பில் அனுப்பி விடுகின்றனர்.

'பாய்ஸ்'க்கு ஒன்றும் இல்லை. ஆனால், 'கேர்ள்ஸ்' வாழ்க்கை எப்படி சின்னாபின்னமா ஆகிடும்னு சொல்லட்டுமா பட்டு?

சமீபத்தில், பத்து பதினைந்து மாணவர்களுடன் ஒரு கல்லூரி மாணவி, குடித்திருக்கிறாள். அவளோடு, 'செல்பி' எடுத்து குடி போதையில் அவள் எப்படி நடந்து கொண்டாள் என்பதை, 'வாட்ஸ் அப்', 'பேஸ் புக்'கில் அனுப்பி விட்டனர். போதை தெளிந்த பிறகு, அந்தப் பெண் தன்னுடைய தகாக நடவடிக்கையை பார்த்து அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள்.

என்ன பயங்கரம் இது... மிகவும் அழகான ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படியா முடியணும்? இதை எல்லாம் பார்க்கும் பெற்றோர் கதிகலங்கி உள்ளனர். ஆரம்பத்திலேயே அந்தப் பெண்ணின் பெற்றோர், 'ஸ்டிரிக்ட்' ஆ பெண்ணை வளர்த்திருந்தால்... இப்படி நடந்திருக்குமா?

'பேஷன்' என்ற பெயரில் பாய்ஸுடன் அளவுக்கு மீறிப் பழகுவதால் வந்த வினை. குடித்திருந்த எந்த மாணவனின் வாழ்க்கையும் பாழாகல. ஆனால், அழகான இந்தப் பெண் இன்று உயிரோடு இல்லை. அவர்கள் பெற்றோருக்கு எப்படி இருக்கும்னு யோசித்துப்பார்.

இதற்காகத்தான் உன்னோட, 'மம்மி' இப்பவே உனக்கு நல்ல பழக்கங்களை சொல்லித் தர்றாங்க... இது பழைய பஞ்சாங்கம் இல்ல செல்லம்... உன்னோட, 'சேப்டியான' எதிர்காலத்துக்காக உன், 'மம்மி' எடுக்கும் முன்னெச்சரிக்கை.

வகுப்பு மாணவர்களுடன் பழகு... ஆனா, தொட்டுப் பேசுவது, கட்டிப் பிடிப்பது இதற்கெல்லாம் அனுமதி கொடுக்காதே..

உன் மீது எப்பவும் ஒரு மரியாதையும், பயமும் பாய்ஸ்சுக்கு இருக்கணும். 'கேர்ள்ஸ்' எப்பவுமே நெருப்பு மாதிரி இருக்கணும். உனக்கு கல்யாணம் ஆகி 'கேர்ள் - பேபி' பொறந்து அது வளரும் போதுதான் உன் அம்மாவின் பயமும், படபடப்பும் உனக்குப் புரியும். ஸோ, அம்மா சொல்றத கேட்டுக்கோ... பெற்றோரின் ஆசிர்வாதம் இருந்தாத்தான் உன்னுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சரியா? பீ ஹேப்பி!

சின்ன கண்டிப்புடன்,

உங்கள் நலனில் அக்கறை கொள்ளும்,

- ஜெனிபர் பிரேம்.







      Dinamalar
      Follow us