தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (201)

இளஸ் மனஸ்! (201)

இளஸ் மனஸ்! (201)


PUBLISHED ON : ஜூன் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள பிளாரன்ஸ்...

என் வயது, 15; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். பாண்டிய மன்னன் போல, எனக்கொரு சந்தேகம்... துருவப்பகுதி மக்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவரா... முதலில் ஐஸ்கிரீம் விற்பனையகங்கள் அங்கு உள்ளனவா...

பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு,

எல்.ராபர்ட் லிவிங்ஸ்டன்.



அன்பு மகனே...

ஐஸ்கிரீம் என்பதை தனி தமிழில், பனிக்கூழ், குளிர் பாலேடு, குளிர்களி என, செல்லமாக அழைக்கலாம். துருவப்பகுதிகளில், குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. அவை, உணவை சூடாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

துருவப்பகுதியில், டீசல் இன்ஜின்களால் உற்பத்தி செய்யப்படுகிறது மின்சாரம். கோகோ கோலா குளிர் பானம் கூட துருவப்பகுதியில் கிடைக்கிறது.

துருவப்பகுதியான அலாஸ்காவில் மக்கள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம் வகைகள்:

* கறுப்பு சாக்லெட் ஐஸ்கிரீம்

* அலாஸ்கா செர்ரி ஐஸ்கிரீம்

* அலாஸ்கா ருபார்ப் கீரை வகை ஐஸ்கிரீம்

* திராட்சை பழ ஐஸ்கிரீம்

* ரோஸ்மேரி நறுமண இலை ஐஸ்கிரீம்

* யோகன் கோல்ட் எனப்படும், மஞ்சள் உருளைக்கிழங்கு ஐஸ்கிரீம்

* ஆப்பிள் லவங்க பட்டை வாதுமை ஐஸ்கிரீம்

* எஸ்கிமோ ஐஸ்கிரீம் எனப்படும் அகுதன். மீன், சோயா பீன்ஸ், பனை எண்ணெய், சிட்ரிக் அமிலம், சர்க்கரை, அலாஸ்கன் பெர்ரி பழங்கள் கலந்த ஐஸ்கிரீம். இது, எஸ்கிமோக்களின் தேசிய உணவாக உள்ளது.

தென் துருவப்பகுதியான அண்டார்டிகாவிலும், ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர்.

உலகில் முதன் முதலில், டாங் ராஜவம்ச பேரரசர்கள், கி.பி., 618 - 907 முதலில் ஐஸ்கிரீமை சுவைத்தவர்கள் என வரலாற்று தகவல் கூறுகிறது.

தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவைகளில் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.

அவற்றில் சில...

ஜிலட்டோ இத்தாலியன் ஐஸ்கிரீம், குல்பி, சர்பத், உறைந்த தயிர், திருவிழா ஐஸ்கிரீம், பிலடெல்பியா ஐஸ்கிரீம், தாய்லாந்து ரிப்பன் ஐஸ்கிரீம், டான்டர்மா ஐஸ்கிரீம், மோச்சி.

மகனே... ஐஸ்கிரீம் எடுத்து மகிழ்வுடன் கொண்டாடு!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us