PUBLISHED ON : ஜூன் 10, 2023

அ நிறம் | அளவு
என் வயது, 70; மதுரை, அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில், பாடங்களை சிறப்பாக நடத்துவதற்கும், நீதிக் கருத்துக்களை விளக்குவற்கும், கற்பித்தலில் சிறந்த துணைக்கருவியாக, சிறுவர்மலர் இதழ் உதவியது.
மலரும் நினைவுகளாய் விளங்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, இளமைக்காலத்தை அசை போடவும், சிந்திக்கவும் வைக்கிறது. அனைவரும் விரும்பும், 'மொக்க ஜோக்ஸ்' பகுதி, உடலுக்கு நலம் பயக்கும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி மற்றும் 'அதிமேதாவி அங்குராசு!' கூறும் தகவல்கள் படிப்போரை வியக்க வைக்கிறது.
சிறுவர் இலக்கியத்தை படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றை எல்லாம் தந்து பிரமிக்க வைக்கிறது, சிறுவர்மலர் இதழ்.
- மா.ரத்தின சபாபதி, மதுரை.
தொடர்புக்கு: 98428 36967
