தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மனித உடலில் இவ்ளோ சமாச்சாரமா?

மனித உடலில் இவ்ளோ சமாச்சாரமா?

மனித உடலில் இவ்ளோ சமாச்சாரமா?


PUBLISHED ON : ஜூலை 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித உடலில் நைட்ரஜன் 10 சதவீதமும், ஹைட்ரஜன் 3 சதவிகிதமும், பிராண வாயு 65 சதவிகிதமும், சுண்ணாம்பு 1.5 சதவிகிதமும் கரி 18 சதவிகிதமும் பாஸ்பரம் 1 சதவிகிதமும், பொட்டாசியம் 0.25 சதவிகிதம், குளோரின் 0.15 சதவிகிதமும், சோடியம் 0.9 சதவிகிதமும், மக்னீஷியம் 0.25 சதவிகிதமும், இரும்பு 0.0004 சதவிகிதமும், அயோடின் 0.00004 சதவிகிதமும் அடங்கியுள்ளது.

எலும்புகளிலும், பற்களிலும் இரத்தத்திலும் கால்சியம் இருக்கிறது. நரம்புகளிலும், எலும்புகளிலும் பாஸ்பரஸ் உள்ளது. சிவப்பு இரத்த அணுக்களில் இரும்பும், சதைகளில் கந்தகமும், கல்லீரலிலும் இருதயத்திலும் தாமிரமும் உள்ளன.

இரத்தம், எலும்பு, பற்களில் மக்னீஷியமும் தைராய்டு சுரப்பியில் அயோடினும் இருக்கிறது. உடலில் தசைகள் 42 சதவிகிதமும், எலும்புக்கூடு 16 சதவிகிதமும், தோல் 7 சதவிகிதமும், கொழுப்பு 19 சதவிகிதமும், மூளை 2 சதவிகிதமும், மார்பறை 2 சதவிகிதமும், வயிற்றறை 7 சதவிகிதமும், இரத்தம் 5 சதவிகிதமும் எடையுள்ளது.

நமது உடலிலிருந்து ஒரு நாளில் 16 கிராம் நைட்ரஜனும், 210 கிராம் கரியும், 4 பைண்ட் நீரும் இன்னும் பல உப்புகளும் வெளிப்படுகின்றன. உடலில் எந்தவிதமான உபயோகமும் இல்லாத உறுப்புகள் 180 உள்ளன. இவற்றிற்கு எச்ச உறுப்புகள் என்று பெயர்.

உடல் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் சக்தி 70 லட்சம் ராத்தல் அடிகளாகும். ஒரு ராத்தல் அடி என்பது ஒரு ராத்தல் எடையை ஒரு அடி உயரம் தூக்கத் தேவைப்படும் சத்தியாகும்.

நமது உடலிலுள்ள பொருட்களைக் கொண்டு பின்வரும் பொருட்களைத் தயாரிக்கலாம்; அந்த அளவுக்கு வேண்டிய பொருட்கள் நம் உடலில் உள்ளன. ஏழு சோப்புக் கட்டிகள் தயாரிக்கத் தேவையான கொழுப்பு; 9000 பென்சில்கள் தயாரிக்கப் போதுமான கரி; ஒரு ஆணி தயாரிக்கப் போதுமான இரும்பு, 2000 தீக்குச்சிகள் செய்யப் போதுமான பாஸ்பரஸ். மனித உடலில் 59 சதவிகிதம் நீர் இருக்கிறது. திடப்பொருள் என்று கருதப்படும் எலும்பில் கூட பாதிப்பாகம் நீர்தான். இரத்தத்தில் 80 சதவிகிதம் நீர் உள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us