
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பலாச்சுளை - 10
தேங்காய் துருவல் - 1 கப்
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 1
இஞ்சி, புளி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
விதை நீக்கிய பலாச்சுளைகளை பொடியாக நறுக்கவும். தேங்காய், மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு, புளியை நன்கு அரைத்து, நறுக்கிய பலா துண்டுகளுடன் கலக்கவும். சுவை மிக்க, 'பலாப்பழ சட்னி!' தயார்.
சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்; இட்லி, தோசைக்கு பக்க உணவாகத் தொட்டுக் கொள்ளலாம். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்.
- மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.

