PUBLISHED ON : செப் 03, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 100 கிராம்
கம்பு மாவு - 75 கிராம்
பச்சரிசி மாவு - 25 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் துருவல், நல்லெண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு, கம்பு, பச்சரிசி மாவுகளை கலக்கவும். அதில் உப்பு கலந்த தண்ணீர் ஊற்றி பிசைந்து, உதிரியாக ஆவியில் வேக வைக்கவும்.
வாணலியில், நல்லெண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பின், வேக வைத்த மாவை போட்டு கிளறவும். இறுதியாக, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான, 'காரப்புட்டு' தயார்!
மிகவும் சுவையாக இருக்கும். காலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்!
- எஸ்.சரஸ்வதி, கடலுார்.
