/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா வாங்கிய நிலம்!
/
ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா வாங்கிய நிலம்!
PUBLISHED ON : டிச 06, 2013

இன்று ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாகாணமாகத்திகழும் இடத்தை (நிலத்தை) ரஷ்யாவிடமிருந்து வாங்கியது அமெரிக்கா. இது நிகழ்ந்தது 1867ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி. அந்த நிலப்பகுதி அலாஸ்கா. ஐக்கிய அமெரிக்கா வின் வட கோடியில் உள்ளது. 1867க்கு முன்பு அலாஸ்கா ரஷ்யாவிற்குச் சொந்த மாக இருந்தது.
டச்சுக்காரரான காப்டன் விடஸ் பெர்ரிங் என்பவர் 1741ல் இப்பகுதிக்கு கடலில் பயணித்து கரடுமுரடான ஒரு நிலப் பகுதியைக் கண்டார். இந்த ஜலசந்திக்கு, 'பெர்ரிங் ஜலசந்தி' என்று தன் பெயரையே இட்டார். ரஷ்யாவின் கடற்படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் விடஸ் பெர்ரிங். ஆகவே, அவர் கண்ட நிலப்பகுதி யான அலாஸ்கா, ரஷ்யர்களுக்கு உரிமை யாயிற்று. அந்த நிலப்பகுதியில் சில எஸ்கி மோக்கள் பெர்ரிங்கை வரவேற்றனர். அவர் கள் அந்த நிலப்பகுதியை, 'அலாக்ஷரக்' என்றனர். அதாவது அவர்கள் மொழியில், 'பெரியநாடு' என்று பொருள்.
எஸ்கிமோக்களின் மென்மயிர்தோலாடை பெர்ரிங்கைக் கவர்ந்தது. மென்மயிருடைய பிராணிகள் நிறையவே அலாஸ்காவில் காணப்பட்டன. ரஷ்யாவிற்குத் தேவையான பர் ஆடைகள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.
அலாஸ்காவிலோ அவர்கள் தேவையைப் பூர்த்திசெய்யுமளவுக்கு பர் தோலாடைகள் கிடைத்தன. ஆகவே, தங்கள் கொடியை அங்கு பறக்கவிட்டு மகிழ்ந்தனர் ரஷ்யர்கள்.
பர் தவிர அலாஸ்காவில் தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோக தாதுக்கள் கிடைக்கும் என்று கருதினர் ரஷ்யர்கள். ஆனால், அவர்கள் கண்ட கனவு பலிக்க வில்லை. அலாஸ்கா வெறும் பொட்டல் வெளியாகும். அங்கு குடியேற விரும்பவில்லை. ஆகவே, அலாஸ்காவைக் கைகழுவி விட காத்திருந்தனர் ரஷ்யர்கள்.
அந்த சர்ந்தப்பமும் வாய்த்தது. அமெரிக்க அரசின் சார்பாக ஹென்றி சிவார்டு என்பவர் ரஷ்யர்களிட மிருந்து அதை விலைக்கு வாங்க முன் வந்தார். சிவார்டு, செகரட்டரி ஆப் ஸ்டேட் ஆகப் பதவி வகித்தார்.
அமெரிக்க மக்கள் தங்கள் அரசாங்கம் ஏமாந்து விட்டதாகப் புலம்பினர். 5,86,400 சதுர மைல் பரப்புள்ள வெறும் பொட்டல் வெளியை 14,50,000 டாலர் களுக்கு வாங்கி முட்டாள்களான தாக ஏசினர். ஆனால், தான் லாபகரமான வியாபாரமே செய்திருப்பதாகக் கூறினார் சிவார்டு. அந்த நூற்றாண்டுக் குள், அலாஸ்கா புதையல் நிலமாகியது. அதற்குச் செல விட்டதைப் போல நூறு மடங்குக்கு தங்கம், மரம், மீன் வளத்தை அளித்த அலாஸ்கா, ரஷ்யர்களுக்குக் கிடைக்காது அமெரிக்கர்களுக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம்தானே!
***

