தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பட்டம் பறக்கட்டும்!

பட்டம் பறக்கட்டும்!

பட்டம் பறக்கட்டும்!


PUBLISHED ON : ஏப் 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிட்னி நகருக்கு வெளியேயுள்ள வயல் வெளியில் ஒரு கூட்டம் அமைதியாகவும், ஆர்வத்துடனும் ஒரு மனிதர் பட்டம் பறக்க விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அன்று ஏப்ரல் மாதம் 6ம் தேதி; ஆண்டு 1893. பட்டம் பறக்க விடுவதில் முனைப்பாக இருந்தவரின் பெயர் லாரன்ஸ் ஹார்கிரேவ்ஸ். லாரன்ஸுக்குப் பட்டங்கள் தயாரித்துப் பறக்க விடுவதில் தனி ஆர்வம்.

அவர் செய்யும் பட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கும். இப்போது அவர் பறக்க விடும் பட்டமும் வித்தியாசமானதுதான். தட்டையான அமைப்பில், எண்ணெய் பூசிய பட்டுத் துணியினால் மூடிய வழக்கமான பட்ட மல்ல இது. பெட்டி போன்ற அமைப்புக் கொண்ட இப்பட்டம், சாதாரணப் பட்டத்தை விட மிக நன்றாகப் பறந்தது. இல்லை, ஆகாயத்தில் மிதந்தபடி நின்றது.

தன் தயாரிப்பைப் பற்றி (பட்டம்) ஹார்கிரேவ்ஸ் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. விமானங்கள் தயாரிப்பில் மகத்தான புரட்சியை, தன் கண்டுபிடிப்பு ஏற்படுத்தப் போகிறது என்றும் கருத வில்லை. ஆனால், சில வாரங்களுக்குப்பின் தெற்கு வேல்ஸிலுள்ள ராயல் சொஸைட்டியில் தன் பட்டம் பற்றி ஒரு விளக்கக் கட்டுரையைப் படித்தார். அதைக் கேட்டவர்களுக்கு அவர் பட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது. பிற்காலத்தில் விமான வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கி பை-பிளேன்களை தயாரித்தவர்களுக்கு, ஹார்கிரேவ்ஸின் பெட்டிப்பட்டம் தான் உந்துதலாக (மாடல்) இருந்தது. ஒன்றன் மீது ஒன்றாக இரு இறக்கை களைக் கொண்ட விமானங்களே பைபிளேன்ஸ்.

எப்போதுமே ஹார்கிரேவ்ஸ், வானத்தில் பொருள்களைப் பறக்கச் செய்வதில் தணியாத ஆர்வம் காட்டுவார். அசையாத இறக்கைகளைக் கொண்ட விமானங்களில் ஆர்வமில்லாதவர். பறவைகளைப் போல விமானங் களும் இறக்கைகளை அசைத்த படி வானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். இதற்காக, இவர் ஏராளமான மாதிரி விமானங்களை உருவாக்கினார். அவற்றில் பல, சில கெஜ தூரம் இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்திருக்கின்றன.

லாரன்ஸ் ஹார்கிரேவ்ஸ் கிரீன்விச்சில் (இங்கிலாந்து) 1850 ல் பிறந்தவர். இவருடைய பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த போது, இவருக்குப் பதினேழு வயது. அதன் பிறகு ஹார்கிரேவ்ஸ் சிட்னியிலேயே செட்டிலாகி விட்டார். இன்ஜினியராகத் தேர்வு பெற்றார். பறக்கும் யந்திரங்களைப் பற்றி நுணுக்கமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ரொம்பவும் கூச்ச சுபாவமுடைய இவர், தன் ஆராய்ச்சிகளைப் பற்றி யாரிடமும் கூறியதில்லை. ஆகாய விமானங் களின் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கிய இவருடைய ஆராய்ச்சிகளினால் ஐடியாக் களினால் பிறர் பலனடைந்தனர்.

இரண்டொரு முறை இங்கிலாந்துக்குச் சென்றதைத் தவிர, ஹார்கிரேவ்ஸ் சிட்னியை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. அங்கேயே 1915ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி காலமானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us