தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மந்திர மோதிரம்

மந்திர மோதிரம்

மந்திர மோதிரம்


PUBLISHED ON : ஏப் 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் செவந்தி நாட்டை அடுத்துப் பெரிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டிலிருந்து திடீரென்று பூதம் ஒன்று செவந்தி நாட்டிற்குள் வந்தது.

அதன் தோற்றமே பயங்கரமாக இருந்தது. பனை மர உயரத்திற்கு இருந்தது அது. யானை போன்று பருத்த உடலுடன் நடந்து வந்தது. அது காலடி வைக்கும் போது பூமியே அதிர்ந்தது. அதன் வாய் பெரிய குகையைப் போல இருந்தது. பளபளக்கும் அதன் கண்களுக்கு யாரையும் மயக்கும் ஆற்றல் இருந்தது.

பாறையைப் போல அதன் உடல் வலிமையாக இருந்தது. ஈட்டியால் குத்தினால் ஈட்டி முனைதான் மழுங்குமே தவிர, அதன் உடலில் சிறு கீறலும் விழாது.

அவ்வப்போது அது நாட்டிற்குள் நுழைந்தது. கண்ணில் பட்டவர்களைக் கொன்று தின்றுவிட்டுக் காட்டிற்குள் சென்றது.

மக்கள் படும் துன்பத்தை அறிந்தான் அந்நாட்டு அரசன். பூதத்தைக் கொல்வதற்காக வீரர்கள் பலரை அனுப்பினான். ஆனால், அவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை.

பூதம் வாழும் காட்டையே எரித்து விடுவோம். பூதமும் சாம்பலாகி விடும் என்று நினைத்தான் அரசன். அதன்படியே காடு எரிக்கப்பட்டது. காடுதான் சாம்பல் ஆகியது. ஆனால், பூதத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.

வேறு வழியில்லாத அரசன், ''யார் பூதத்தைக் கொன்றாலும் இளவரசி யோகியைத் திருமணம் செய்து கொள்ளலாம். நாட்டில் பாதியையும் பெறலாம்,'' என்று அறிவித்தான்.

மாவீரர்கள் பலர் இந்த முயற்சியில் இறங்கினர். எல்லாரும் பூதத்திற்கு இரையாயினர்.

பக்கத்து நாட்டு இளவரசன், யோகியின் பேரழகைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவளைத் திருமணம் செய்ய நினைத்தான்.

'பூதத்தைக் கொன்றால் இளவரசியை மணக்க முடியும். மாவீரர்கள் பலரும் அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை, என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.

தன் நாட்டிலிருந்த மந்திரவாதிகள் அனைவரையும் வரவழைத்தான்.

''அந்தப் பூதத்தை எப்படியாவது கொல்ல வேண்டும். உங்கள் மந்திர ஆற்றலால் அதைச் செய்ய முடியுமா?'' என்று கேட்டான்.

அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிப் பேசினர்.

அவர்களில் ஒருவர், ''இளவரசே! மந்திரத்தாலோ, வீரத்தாலோ அந்தப் பூதத்தைக் கொல்ல முடியாது. அதனால் இந்த முயற்சியை விட்டு விடுங்கள்,'' என்றார்.

''அந்தப் பூதத்தைக் கொல்ல ஏதேனும் வழி இருக்க வேண்டுமே. அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்,'' என்றான்.

''இளவரசே! பூதத்தைக் கொல்வது யாராலும் இயலாது என்றே நினைக்கிறோம். உலகத்தின் கிழக்கு மூலையில், சாலமானின் மந்திர மோதிரம் உள்ளதாகச் சொல்கின்றனர். அது எங்கே உள்ளது? யாரிடத்தில் உள்ளது? என்பது யாருக்கும் தெரியாது.

''அந்த மோதிரத்தில் எழுதப்படாத மந்திரச் செய்திகளே இல்லை. பூதத்தைக் கொல்லும் வழிமுறையும் அதில் கண்டிப்பாக இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.

''இன்றே சாலமனின் மந்திர மோதிரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறேன்,'' என்ற இளவரசன் அங்கிருந்து புறப்பட்டான்.

குதிரையில் அமர்ந்த இளவரசன், கிழக்குத் திசையில் பல நாட்கள் பயணம் செய்தான். களைப்பு அடைந்த குதிரை வழியிலேயே இறந்து விட்டது.

பசியாலும், தாகத்தாலும் துடித்தான். கிழக்குத் திசையை நோக்கி நடந்தபடியே இருந்தான். அங்கே துறவி ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவனைப் பார்த்த அவர், அவனுக்கு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் தந்தார்.

''இளைஞனே! இதுவரை எந்த மனிதனும் இங்கு வந்தது இல்லை. நீ எப்படி இவ்வளவு தொலைவு வந்தாய்?'' என்று அன்புடன் கேட்டார்.

நடந்ததை எல்லாம் சொன்ன இளவரசன், ''துறவியாரே! நீங்கள்தான் எனக்கு சாலமனின் மந்திர மோதிரம் கிடைக்க அருள் செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.

''நான் அந்த மோதிரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அது எங்கே உள்ளது என்று எனக்குத் தெரியாது.

''என்னிடம் மந்திரத் தண்ணீர் உள்ளது. அதைக் குடித்தால் விலங்குகள், பறவைகள் பேசுவது அனைத்தும் கேட்கும். உனக்கு நல்லவாய்ப்பு இருந்தால் சாலமனின் மோதிரம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார் துறவி.

மந்திரத் தண்ணீரைக் குடித்தான் இளவரசன். அவரை வணங்கிவிட்டுக் கிழக்குத் திசையில் வெகு தொலைவு நடந்தான். களைப்பு அடைந்த அவன் ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரத்தின் கிளையில் மூன்று பறவைகள் அமர்ந்து இருந்தன.

முதலாவது பறவை, ''கீழே படுத்திருக்கும் இளவரசனைப் பார்த்தாயா? சாலமனின் மந்திர மோதிரத்தைத் தேடி வந்துள்ளார். அவனை நினைத்தாலே எனக்கு வருத்தமாக உள்ளது. அது அவனுக்குக் கிடைக்கும் வாய்ப்பே இல்லை,'' என்றது.

அதற்கு இரண்டாவது பறவை, ''அப்படிச் சொல்ல முடியாது. சூனியக்காரி அழகியை அவன் சந்தித்தால் மோதிரம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அந்த அழகி ஓரிடத்தில் இருக்க மாட்டாளே... அவளை இவன் எங்கே சென்று தேடுவான்,'' என்றது.

குறுக்கிட்ட மூன்றாவது பறவை, ''அவள் எங்கே இருந்தாலும் முழுநிலவு நாளன்று மந்திரப் பொய்கையில் நீராடுவாள். அதில், நீராடுவதால்தான் அவள் என்றும் இளமையோடு அழகியாக இருக்கிறாள்,'' என்றது.

''நான் அந்த சூனியக்காரி அழகியைப் பார்த்தது இல்லை. இன்று முழு நிலவு நாள்தானே. அந்தப் பொய்கை எங்கே உள்ளது? நான் அவளைப் பார்க்க வேண்டும்,'' என்றது முதலாவது பறவை.

''ஆமாம். நானும் அவளைப் பார்க்க வேண்டும்,'' என்றது இரண்டாவது பறவை.

''அந்தப் பொய்கை அருகில்தான் உள்ளது. நான் காட்டுகிறேன்,'' என்று பறந்தது மூன்றாவது பறவை.

பறவைகள் பேசிய அனைத்தையும் கேட்டான் இளவரசன், அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.

பறந்து சென்ற அந்தப் பறவைகள் பொய்கைக் கரையிலிருந்த ஒரு மரத்தில் அமர்ந்தன.

அவன் வருவதைப் பார்த்த முதலாவது பறவை, ''அந்த இளவரசன் இங்கும் வந்து விட்டான் பார்த்தாயா? அவனுக்குக் கெட்ட நேரம்தான். சூனியக்கார அழகி அவனைப் பார்த்து விட்டால் போதும், அதன்பிறகு அவளிடமிருந்து அவனால் உயிர் தப்ப முடியாது,'' என்றது.

''அவன் திறமைசாலியாக இருந்தால் அவளிடம் சிக்க மாட்டான். அவள் அவனிடம் மூன்று சொட்டு ரத்தம் கேட்பாள். அதை அவன் தராத வரை அவனுக்கு ஆபத்து இல்லை,'' என்றது இரண்டாவது பறவை.

அப்போது பேரழகி ஒருத்தி அங்கு வந்தாள். மின்னலைப் போல அவள் உடல் ஒளி வீசியது. பொய்கையில் இறங்கிய அவள் மகிழ்ச்சியாக நீராடினாள். நீராடி முடித்துக் கரைக்கு வந்தாள்.

அவள்தான் சூனியக்கார அழகி என்பது இளவரசனுக்குப் புரிந்தது.

''பேரழகியே! வணக்கம்,'' என்றான் இளவரசன்.

அவனை அன்பாகப் பார்த்த அவள், ''என்னுடன் வாருங்கள்,'' என்றாள். தன் அரண்மனைனக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அந்த அரண்மனை மிக அழகாக விளங்கியது. அங்கே அவனுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டாள் அவள். அவன் கேட்டதை எல்லாம் தந்தாள் அவள்.

சில நாட்கள் சென்றன-

மயக்கும் விழிகளால் அவனைப் பார்த்த அவள், ''அன்பரே! நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். மூன்று சொட்டு ரத்தத்தை எனக்குத் தாருங்கள். அதன் பிறகு நீங்கள் என் கணவராகி விடுவீர்கள்.

''நான், இந்த அரண்மனை, இங்குள்ள பொருள்கள் அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். நீங்கள் என்ன கட்டளை இட்டாலும் அதை உடனே நிறைவேற்றுவேன்,'' என்று கொஞ்சும் குரலில் சொன்னாள்.

பறவைகள் பேசியது அவன் நினைவிற்கு வந்தது.

''அன்பே! நம் திருமணத்திற்கு என்ன அவசரம்? சில நாட்கள் செல்லட்டுமே,'' என்றான் இளவரசன்.

அவள் திருமணப் பேச்சை எடுத்தால் போதும். ஏதேனும் காரணம் சொல்லி நாட்களைக் கடத்தி வந்தான்.

'தன் பெருமையைக் காட்ட வேண்டும். எப்படியாவது அவனைத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்' என்று நினைத்தாள். தன் மந்திர ஆற்றல்களை எல்லாம் அவனிடம் சொன்னாள்.

''நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் நான் உங்கள் அடிமையாகி விடுவேன். உங்களால் செய்ய இயலாத செயல்களே இல்லை,'' என்றாள்.

''அன்பே, உன்னைத் திருமணம் செய்து கொள்ள நானும் ஆவலாக உள்ளேன். உன்னை முழுமையாகத் தெரிந்து கொண்ட பிறகு நம் திருமணம் நிகழ வேண்டும். அப்பொழுதுதான் நம் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்னும் ஏதேனும் மந்திர ஆற்றல் உன்னிடம் உள்ளதா?'' என்று இனிமையாகக் கேட்டான்.

- தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us