
கண் கொடையளிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்...
இறந்தவுடன் கண் இமைகளை மூடவும். உடல் இருக்கும் அறையில் மின்விசிறியை இயக்கக்கூடாது. தலையணையால், தலையை உயர்த்தி படுக்க வைக்கவும். அருகே உள்ள கண் வங்கியுடன் தொடர்பு கொள்ளவும். கண் வங்கிக்குழு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளும்.
விரைவாகவும், எளிதாகவும் குழுவினர் வரும் வகையில் வழிகாட்டி தகவல் சொல்லவும். கொடை வழங்கும் போது, இரண்டு பேர் சாட்சியளிக்க வேண்டும். இறந்த, ஆறு மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும்.
கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களும் கொடையளிக்கலாம்.
நாய் கடி, டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தால் இறந்தவர்களின் கண்களை கொடையளிக்க முடியாது.
கண்கொடை பற்றி விவரம் பெற, சென்னை, எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையை, 044 - 2855 3840 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

