தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குள்ளா!

குள்ளா!

குள்ளா!


PUBLISHED ON : பிப் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசுவும், வினுவும் நண்பர்கள். அவர்கள் இருவரும் தெருவில் சென்றபோது, இரண்டு கைகளையும் இழந்து, குள்ளமாய்க் காணப்பட்ட ஒருவனைப்பார்த்து, ''வினு! அவனைப் பார்த்தாயா? சித்திரக்குள்ளனாக இருக்கும் இவன் எல்லாம் எதற்காகப் பிறந்தான்? இவன் பிறக்கவில்லை என்று யார் அழுதது?'' என்று கேட்டான் வாசு.

''கேலி செய்யாதே வாசு! ஏதோ, அவன் செய்த பாவம் அப்படிப் பிறந்து விட்டான்,'' என்றான் வினு.

''அவன் எதற்காக அப்படிப் பிறந்தான் தெரியுமா? நாம் பார்த்து ரசிப்பதற்காகதான். கொஞ்சமாக ரசித்தால் போதாது. நிறைய ரசித்துச் சிரிக்கும் படியான ஒரு காரியத்தை செய்யப் போகிறேன்,'' என்று கூறி விட்டு, போய்க் கொண்டு இருந்த குள்ளனை அழைத்து, அவன் கண்ணில் மண்ணை அள்ளிப் போட்டான்.

அந்தக் குள்ளன், ''அடப்பாவி! நீ நாசமாகப் போக! என் கண்களில் மண்ணை அள்ளிப் போட்ட நீ குட்டிச் சுவராகப் போகப் போகிறாய்!'' என்று வாசுவிற்கு சாபம் கொடுத்துவிட்டு, எரிச்சல் பொறுக்க முடியாமல் கத்தினான்.

அவன் வேதனைப்படுவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தான் வாசு.

அதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த வினுவுக்கு எரிச்சல், ''அவனுடைய வேதனை உனக்கு சிரிப்பாக இருக்கிறதா? பிறர் துடிப்பதைப் பார்த்து மகிழும் உன்னோடு பழகவே எனக்குப் பிடிக்கவில்லை!'' என்று கூறி அவனை விட்டுப் பிரித்து போய் விட்டான்.

அதற்காக வாசு வருத்தவில்லை; திருந்தவில்லை. மேலும் மேலும் பலரைத் துன்புறுத்தி, அவர்களுடைய சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சிக் கடலில் நீந்தினான் வாசு.

சில நாட்கள் சென்றன.

'வாசு வண்டியில் அடிபட்டு, இரண்டு கால்களும் முறிந்து படுத்த படுக்கையாக இருக்கிறான்' என்று கேள்விப்பட்டு வினுவுக்கு, மனம் கேட்கவில்லை. வாசுவைப் பார்ப்பதற்காக அவன் வீட்டுக்குச் சென்றான்.

கட்டிலில் கிடந்த வாசு, அவனைப் பார்த்தும், ''வினு! என் கால்கள் ஒடிந்து விட்டன. எனக்கு ஏன் இந்தக் கதி?'' என்று கவலையோடு கேட்டான்.

''அது உனக்கு புரியவில்லையா? நீ இதுவரை என்ன செய்யதாய் என்பதை நினைத்துப் பார். நீ மற்றவர்களைத் துன்புறுத்தி, அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தாய். அந்தப் பாவம் உன்னை விடவில்லை. உன்னால் துன்பப்பட்டவர்கள் கொடுத்த சாபம், உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது. கேடு நினைத்தால் கேடு தேடி வரும்,'' என்றான் வினு.

''வினு! நீ சொன்னது எல்லாம் உண்மை. அது எனக்குக் கேடு செய்யும் பொழுது புரியவில்லை. கேடு வந்த பிறகுதான் புரிகிறது. இனி நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன். கேலி செய்ய மாட்டேன்.

''நான் மறுபடியும் எழுந்து நடமாடுவேனா?'' என்று கேட்டான் வாசு.

''மனம் திருந்திய நீ, நிச்சயம் எழுந்து நடமாடுவாய்,'' என்றுஆறுதல் கூறினான் வினு.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us