தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அன்பு!

அன்பு!

அன்பு!


PUBLISHED ON : மே 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மவுரிய நாட்டு மன்னர் அரண்மனையில் அழகிய நாயை அன்புடன் வளர்த்து வந்தார். நாயுடன் ஓடிப்பிடித்து விளையாடுவர். அதை பாதுகாக்க ஏராளமான பணியாளர்களை நியமித்திருந்தார்.

மாலை நேரத்தில் மன்னர் ஓட, நாயும் பின்னால் ஓடும். எல்லாரும் அதன் மீது, பாசமும், அன்பும் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் -

நாயுடன் நீண்ட நேரம் விளையாடினார் மன்னர்; அதன் முன்னங்கால்களை துாக்கினார்; அவர் அணிந்திருந்த பவள மாலையை கவ்வியது நாய். எதிர்பாராத விதமாக, மாலை அறுந்து விழுந்தது; பவளங்கள் உருண்டு ஓடின.

மன்னருக்கு மிகவும் விருப்பமான மாலை அது. அறுந்து விழுந்தது கண்டு கடுங்கோபம் கொண்டார்; வாளால், நாயை வெட்ட முயன்றார். தப்பி ஓடியது நாய்.

ஆவசேம், அறிவை மறைக்கும் என்பது உண்மையானது. மன்னர் கையிலிருந்த வாள், தவறி அவரது காலிலே விழுந்தது. காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக் கண்ட நாய், துடியாய் துடித்து அழுதது. அவரது காலை சுற்றி வந்தது.

நாயின் அன்பைக் கண்ட மன்னர், 'எவ்வளவு பெரிய தவறை செய்ய இருந்தோம்' என எண்ணி, வருந்தினார். நாயை பரிவுடன் பாதுகாக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குட்டீஸ்... உண்மை அன்பை புரிந்து கொள்ள வேண்டும்; எதையும் நிதானமாக யோசித்து செயல்படுத்த வேண்டும். சரியா!

கே.என்.ராமகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us