தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாமேதை - மனநோயாளி!

மாமேதை - மனநோயாளி!

மாமேதை - மனநோயாளி!


PUBLISHED ON : பிப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கில அகராதியில் புகழ் பெற்றது ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலை தொகுத்துள்ள டிக்ஷனரி தான். இதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் டாக்டர் ஜேம்ஸ் முர்ரே என்பவர் உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள், ஒரு நபரிடமிருந்து வந்த வண்ணமிருந்தன. என்ன கடிதங்கள்? 'அகராதியை எப்படி உருவாக்க வேண்டும்; என்னென்ன விஷயங்கள் எப்படி எப்படி அமைய வேண்டும்' என்று மிகச் சிறந்த; ஆக்கப்பூர்வமான, ஆராய்ச்சி மனப்பான்மை யோடு யோசனைகள் கூறப்பட்டிருந்தன அந்த கடிதங்களில். முர்ரேக்கு அளவில்லாத மகிழ்ச்சி; மற்றும் வியப்பு. அந்த அறிவாளியைச் சந்திக்கவும் அவரைப் பாராட்டி நன்றி தெரிவிக்கவும் விரும்பினார்.

கடிதங்களிலிருந்த அவர் விலாசத்துக்குக் கடிதம் எழுதினார். இங்கிலாந்திலுள்ள க்ரோத் ரோன் என்னுமிடத்திலிருந்துதான் அந்தக் கடிதங்களெல்லாம் வந்து கொண்டிருந்தன.

முர்ரே, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியின் விருந்தாளியாக அந்த அறிவாளியை ஒரு வாரம் வந்து தங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அகராதி தயாரிப்பாளரான முர்ரேக்கு பதில் வந்தது. உடல் அசவுகரியம் காரணமாகத் தன்னால் ஆக்ஸ்போர்டுக்கு வர இயலாதென்றும், க்ரோத்ரோனுக்கு சர் ஜேம்ஸ் முர்ரே வருவாரானால் தாம் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டிருந்தார் மினார்ஸ்.

புகழ்பெற்ற ஆங்கிலச் சொல் அகராதி தொகுப்பாளரான சர் ஜேம்ஸ் முர்ரே, மிகுந்த உற்சாகத்தோடு இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். க்ரோத்ரோனுக்கு ரயில் வண்டியில் பயணமானார். வெலிங்டன் காலேஜ் ஸ்டேஷனில், ஒரு வண்டி இவர் வரவுக்காகக் காத்திருந்தது.

கோச் வண்டிக்காரன் ஏதும் பேசாமல் அவரை ஒரு பெரிய செங்கல் கட்டடத்தின் முன்கொண்டு போய் விட்டான். அவரை ஒரு அறைக்குக் கூட்டிப்போய், ஒரு மனிதரிடம் விட்டனர்.

முர்ரே நினைத்தார், தன்னோடு கடிதத் தொடர்பு கொண்ட அறிவாளி மினார்ஸ் அவர்தான் என்று. ஆனால்...

அவர் சட்டென்று, ''நீங்கள் நினைப்பது போல டாக்டர் மினார்ஸ் நானல்ல. இது பிராட்மூர் பைத்தியக்காரக் குற்றவாளிகளின் விடுதி. இங்குள்ள நோயாளிகளில் மினார்ஸும் ஒருவர். நான் இவ்விடுதியின் சூபரின்டெண்ட், டாக்டர் பிரேஸி,'' என்று கூறினார்.

''மூளை சரியில்லாத குற்றவாளிகளுக்கான இந்த விடுதிக்கு மினார்ஸ் அனுப்பப்பட்டார். தறிகெட்டுப் போயிருந்த அவருடைய புத்தி இங்கு வந்த பிறகு மெதுவாக அமைதிப்பட்டது. படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வம் இதை உறுதிப்படுத்தியது. ஆகவே, அவருக்கு நிறையப் புத்தகங்களை வழங்கினோம். பெரிய ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி உருவாகும் செய்தி, அவர் மனத்தில் ஒரு பரபரப்பை; மகிழ்ச்சியை உண்டாக்கியது. அவர் தன் சிந்தனை முழுவதையும் அந்த அகராதி உருவாவதற்காக யோசனைகள் கூறுவதில் ஈடுபடுத்தினார். அவர் மன அமைதிக்கு நாங்களும் உதவினோம். உங்களுக்கு அவர் யோசனைகள் கூறி, எழுதிய கடிதங்களையெல்லாம் அலட்சியப்படுத்தாமல் உங்களுக்கு அனுப்பிவைத்தோம். அதன் விளைவுதான் நீங்கள் இங்கு வந்திருப்பது. நீங்கள் விரும்பினால், அந்த மன நோயாளியான மினார்ஸிடம் அழைத்துப் போகிறேன்,'' என்றார் பிரேஸி.

அந்த இரு மாமேதைகளுக்குமிடையே அந்த சந்திப்பு, பேட்டி, நீண்ட நேரம் நிகழ்ந்தது. அது பரிதாபகரமானது; மறக்க முடியாதது; அதன் பிறகு அவர்கள் சந்திக்கவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பிறகு மினார்ஸ் விண்ட்ஸரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் பைத்தியம் தெளிவாக்கப்பட்டது. பிறகு தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகத் தியானத்தில் ஈடுபட்டார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் மனநோயாளியான டாக்டர் டபிள்யு. ஸி. மினார்ஸின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us