PUBLISHED ON : டிச 04, 2021

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
சாதம் - 3 கப்
நல்லெண்ணெய் - 100 மி.லி.,
மிளகாய் வற்றல் - 4
உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை - தலா 2 தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
சாதம் வடித்து, தட்டில் கொட்டி உதிரியாக்கி, நல்லெண்ணை பரவலாக ஊற்றி, ஆற விடவும். சிறிது எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்கடலை, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் ஆறிய சாதத்தை போட்டு கிளறி இறக்கவும். சுவைமிக்க, 'மாங்காய் சாதம்!' தயார்.
வடாம், அப்பளத்துடன் சுவைக்கலாம். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
- சவுமியா சுப்ரமணியன், சென்னை.
