தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மார்கரெட் தாட்சர்!

மார்கரெட் தாட்சர்!

மார்கரெட் தாட்சர்!


PUBLISHED ON : செப் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லிங்கன்ஷயர் நகரில், அக்டோபர் 13, 1925ல் பிறந்தார் மார்கரெட். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், 1946ல் படித்தார். அப்போது, கன்சர்வேட்டிவ் கட்சியின் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படிப்பை முடித்து, பிரிட்டிஷ் சைலோ நைட் என்ற நிறுவனத்தில் வேதியியல் நிபுணராகப் பணியாற்றினார்.

தொழிலதிபர் டெனிஸ் தாட்சரை, 1951ல் மணந்தார். பின் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

மார்கரெட்டின் தந்தை ராபர்ட்ஸ் அரசியலில் இருந்தார். எனவே, இவரும் அரசியலில் ஈடுபட விரும்பினார். டார்ட்போர்டு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், 1950ல் தேர்தலில் போட்டியிட்டார்.

தோல்வியை தழுவிய போதிலும், விடாது முயன்று, பிரிட்டீஷ் நாடாளுமன்ற கீழவைக்கு, 1959ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார். தேர்தலில், 1979ல் வெற்றி பெற்று, பிரிட்டீஷ் அரசின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார்; பின், மூன்று முறை பிரதமராக பொறுப்பு வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us