தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அளப்புறாங்கப்பா!

அளப்புறாங்கப்பா!

அளப்புறாங்கப்பா!


PUBLISHED ON : மே 31, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அரசே! நான் சொல்லப் போகும் கதையை நீங்கள் நம்பப் போவது இல்லை. எனக்குப் பரிசு தரத்தான் போகிறீர்,'' என்றார் அவர்.

'இவ்வளவு தலைக்கனமா உமக்கு? மற்றவர்கள் ஏமாந்தும், உமக்கு அறிவு வரவில்லையா? எப்படிப்பட்ட அளப்புக் கதை வேண்டுமானாலும் சொல்லும். நான் அதை நம்பப் போவதும் இல்லை. நீர் பரிசு பெறப் போவதும் இல்லை' என்று தனக்குள் சிரித்தான் அரசன்.

''உம்... அளப்புக் கதையைச் சொல்லும்,'' என்றான்.

''அரசே! நான் சென்ற பிறவியில் மகிழ நாட்டு இளவரசனாகப் பிறந்தேன். நீங்கள் அங்கே ஏழையாகப் பிறந்தீர்கள். வறுமையில் வாடினீர்கள். சிறுவர்களாக இருந்த போதே நாம் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அடிக்கடி நான் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவேன், நீங்களோ அதை மறுத்து விடுவீர்கள்.

''ஆண்டுகள் பல சென்றன. நான் மகிழ நாட்டு அரசன் ஆனேன். வழக்கம் போல அரியணையில் அமர்ந்து இருந்தேன்.

''அப்போது நீங்கள் அங்கே வந்தீர்கள். கந்தல் ஆடையுடன் பசியும், பட்டினியுமாகப் பரிதாபமாகக் காட்சி அளித்தீர்கள். உங்கள் நிலைமையைப் பார்த்து வருந்திய நான் அரியணையில் இருந்து எழுந்தேன்.

''நண்பா...'' என்று உங்களைக் கட்டி அணைத்து வர வேற்றேன். உயர்ந்த இருக்கை யில் அமர வைத்தேன்.

''என்னைத் தயக்கத்துடன் பார்த்த நீங்கள், நான் வறுமையில் வாடுகிறேன். உங்களிடம் கடன் கேட்டு வந்துள்ளேன்'' என்றீர்கள்.

''நண்பா! நான் பலமுறை உதவி செய்ய முன் வந்தேன். நீ ஏற்றுக் கொள்ளவில்லை. வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கு கிறேன். நண்பனான நீ என்ன கேட்டாலும் தருவேன். என்ன வேண்டும்? தயங்காமல் கேள், தருகிறேன்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னேன்.

''அதற்கு நீங்கள், 'நான் யாரிடமும் எதையும் இனாமாகப் பெற விரும்பவில்லை. நான் கேட்பதைக் கடனாகத் தருவதாக இருந்தால் சொல்லுங்கள், பெற்றுக் கொள்கிறேன். இனாம் என்றால் வேண்டாம் இங்கிருந்து சென்று விடுகிறேன்' என்றீர்கள்.

''நண்பா! உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. உனக்கு எவ்வளவு கடன் வேண்டும்? கேள், தருகிறேன்,'' என்றேன் நான்.

''எனக்கு ஐயாயிரம் பொற்காசுகள் கடனாகத் தாருங்கள். என் வறுமை நீங்கி விடும். நான் வளமாக வாழத் தொடங்குவேன். இந்த பிறவியில் உங்கள் கடனை எப்படியும் அடைத்து விடுவேன். அப்படி முடியாமல் போனால், மறுபிறவியில் கண்டிப்பாக அடைத்து விடுவேன்,'' என்று கண் கலங்கச் சொன்னீர்கள்.

''நான் ஐயாயிரம் பொற்காசுகள் தந்தேன். நீங்களும் அந்தக் கடனை அடைக்க முயற்சி செய்தீர்கள். உங்களால் முடியவில்லை. கடனை அடைக்காமலேயே இறந்து விட்டீர் கள். இந்தப் பிறவியில் நீங்கள் அரசனாகப் பிறந்தீர்கள். அப்போது அரசனாக இருந்த நான் ஏழைக் கலைஞனாகப் பிறந்தேன்.

சென்ற பிறவியில் நடந்தது எல்லாம் என் நினைவுக்கு வந்தது. பழைய நண்பரைச் சந்திக்கலாம். கடனையும் திரும்பப் பெறலாம் என்று இங்கே வந்தேன். நான் கொடுத்த கடனைத் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்,'' என்றார்.

இதைக் கேட்ட அரசன் திகைத்தான்.

'இந்தக் கதை நடந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் இவரிடம் கடன் பெற்றதை ஒப்புக் கொண்ட தாகி விடும். இவருக்கு ஐயாயிரம் பொற்காசுகள் தர வேண்டும். அதுமட்டும் அல்ல... சென்ற பிறவியில் நான் வறுமையில் வாடினேன் என்றாகி விடும். என் பெருமைக்குக் குறைவு வரும். நம்ப வில்லை என்றால் இழப்பு ஆயிரம் பொற்காசுகளோடு போகும்,'' என்பது அவனுக்கு புரிந்தது.

''நீர் சொன்னது நல்ல அளப்புக் கதை. சிறிதும் நம்பும்படியாக இல்லை. போட்டியில் வெற்றி பெற்று விட்டீர். ஆயிரம் பொற்காசு களைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளும்,'' என்றான்.

பரிசைப் பெற்றுக் கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டார். தன் சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என்பதை அறிந்து வருந்திய மன்னன், அதன் பின் கதை கேட்கும் பழக்கத்தையே விட்டு விட்டான்.

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us