PUBLISHED ON : அக் 24, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
நாட்டு சர்க்கரை - 250 கிராம்
பீட்ரூட் - 100 கிராம்
பன்னீர் ரோஜா பூ - 3
ஏலக்காய் பொடி - தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம் செய்த பீட்ரூட்டை, தோல் நீக்கி துருவி சாறு பிழியவும். காய்ச்சிய பால் நன்கு ஆறிய பின், பீட்ரூட் சாறை கலக்கவும். கவரும் நிறம் வரும்.
இந்த கலவையில், ரோஜா இதழ்களை, 60 நிமிடம் ஊறவிடவும். பின், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் பொடியை கலக்கவும். இதை வடிகட்டி குளிரூட்டினால், 'இயற்கை ரோஸ் மில்க்' தயார்.
சுவையும் மணமும் நிறைந்தது. உடல் நலனை பாதுகாக்கும். சிறுவர், சிறுமியர் விரும்பி சுவைப்பர்!
- ஜி.வடிவுக்கரசி, கோவை.
தொடர்புக்கு: 99947 78902
