PUBLISHED ON : அக் 22, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
நேந்திரம் வாழைப்பழம் - 5
பால் - 1 லிட்டர்
முந்திரி - 12
துண்டுகளாக நறுக்கிய தேங்காய் - 0.5 கப்
வெல்லம், நெய், ஏலக்காய் பொடி, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நேந்திரம் வாழைப்பழங்களை குழைய வேக வைக்கவும். ஆறியதும், தோல் நீக்கி, கறுப்பு விதைகளை நீக்கி துண்டுகளாக்கி அரைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி, நீர் விட்டு பாகு காய்ச்சவும். வாணலியில் நெய் காய்ந்ததும், பழக்கூழ் சேர்த்து கிளறவும்.
சுண்டி வரும் போது, வெல்லப் பாகு சேர்த்து கிளறவும். பின், பால் சேர்த்து கொதிக்க விடவும். அதில், நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகளை சேர்த்து, ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.
சுவை மிக்க, 'நேந்திரம் வாழைப்பழ பாயாசம்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- அ.ப.ஜெயபால், சிதம்பரம்.
