PUBLISHED ON : டிச 11, 2015

அ நிறம் | அளவு
விஞ்ஞானி நியூட்டன் சோதனைச் சாலையிலேயே தனது நேரம் முழுவதையும் செலவழித்தார். உணவையும், உறக்கத்தையும் மறந்து, துறந்து சோதனையில் ஆழ்ந்து விடுவார். ஒருமுறை, அவரது வேலையாள் அவரைச் சோதிக்க விரும்பினான்.
தான் சாப்பிட்ட தட்டைக் கொண்டு வந்து வைத்தான். சிறிது நேரம் சென்று, நியூட்டன் சாப்பிடும் மேஜைக்கு வந்தார். சாப்பிட்ட தட்டை பார்த்து. 'சாப்பிட்டு விட்டோம் போலிருக்கிறது. நான் தான் மறந்துபோய் இங்கு வந்து விட்டேன்' என்று சொல்லி திரும்பிச் சென்றார். அவரது ஈடுபாட்டை கண்டு வியந்தான் வேலையாள். அவரது எண்ணம், நினைப்பு எல்லாமே ஆய்வு கூடத்திலேயே இருந்ததுண்ணா பாருங்க குட்டீஸ்!
