
கடந்த, 2002ல், சிதம்பரம், தனியார் உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பு ஆசிரியை நிர்மலாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
எனக்கு, நிறைய படிக்க ஆசை! ஆனால், எங்கள் வீட்டில், 'பத்தாம் வகுப்புக்கு மேல், படிக்க வைக்க முடியாது...' என்று கூறினர்.
ஏனென்றால், என் தந்தை, பத்தாம் வகுப்பு ஆரம்பத்திலேயே இறந்து விட்டார். அதனால், 'பத்தாம் வகுப்பு மட்டும் படி...' என்று சொல்லி விட்டார் அம்மா.
பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சியடைந்தேன். என்ன செய்வது என்று யோசித்தபடியே, பள்ளிக்கு டி.சி., வாங்கச் சென்றேன். அப்போது, நிர்மலா டீச்சர், 'ஏன், டி.சி., வாங்குற...' என்றார்.
நடந்ததைக் கூறினேன். என் வீட்டிற்கு வந்து, என் அம்மாவிடம், 'நான் படிக்க வைக்கிறேன்... தயவுசெய்து, இவளை பள்ளிக்கு அனுப்புங்க...' என்று சொல்லி சென்றார்.
நிர்மலா டீச்சர், எனக்கு நிறைய உதவி செய்தார். இந்த உதவியால், என் குடும்பத்தை மேலே கொண்டு வந்துள்ளேன். அவரை என்னால் மறக்கவே முடியாது.
- ஆ.ஜெய ஸ்ரீ, கடலூர்.