தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கண்டிப்பதும் கடமை!

கண்டிப்பதும் கடமை!

கண்டிப்பதும் கடமை!


PUBLISHED ON : அக் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் இது...

ஓவிய ஆசிரியர் கருணாநிதி, குறும்பு செய்யும் மாணவர்களின் காதை கிள்ளுவார். வலியால், கை, கால்களை உதறி துடித்தாலும் விட மாட்டார்.

அவரிடம், அடிக்கடி சிக்கும் மாணவர்களில் சிலர், ஒருமையில் திட்டி, உடும்புடன் தொடர்பு படுத்தி கிண்டல் செய்தனர்.

இதையறிந்தவர், 'என்னை மோசமாக விமர்சித்தது யார்...' என, கேட்டார். வகுப்பறையே அமைதியானது.

சற்று நேர மவுனத்துக்கு பின், கண்களில் நீர் மல்க, 'மிகவும் உயர்ந்த, குரு என்ற நிலையில் நான் இருக்கிறேன். உங்களுக்கு, ஒழுக்கமும், பண்பும் கற்று தருவது தான் என் வேலை. உங்கள் குறும்பு தனத்தை, உடனே தட்டி கேட்காவிட்டால், நாளடைவில், பெரிய குற்றச்செயலுக்கு துாண்டுகோலாகி விடும். கண்டித்து நேர் படுத்துவதும் என் கடமை...' என்றார்.

சம்மந்தப்பட்டவர்கள் வெட்கி தலை குனிந்தனர். அன்று முதல், அவரை விமர்சனம் செய்வதை விடுத்து, பாடங்களில் கவனம் செலுத்தினோம்.

என் வயது, 34; இந்த சம்பவம், 23 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றாலும், நினைவில் பதிந்துள்ளது. கண்டிப்புடன் நல்வழிப்படுத்திய, அந்த ஆசிரியரை போற்றுகிறேன்.

- ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us