தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓரல் எக்ஸாம்!

ஓரல் எக்ஸாம்!

ஓரல் எக்ஸாம்!


PUBLISHED ON : அக் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கள் பள்ளி, செல்லாங்குப்பம் என்ற கிராமிய சூழ்நிலையில் உள்ள மெட்ரிக் பள்ளி. அதில், அனேக பெற்றோர் படிக்காதவர்கள்.

எல்.கே.ஜி., மாணவன் ஒருவன், இன்னும் மழலை மாறவில்லை. பெயரை கேட்டால், அல்போன்ஸ் என்று சொல்லத் தெரியாது. அல்பம் என்றுதான் சொல்லுவான். வணக்கம் என்பதை, 'வதக்கம்' என்று சொல்லுவான்.

முழு ஆண்டு தேர்வின் இரண்டாவது நாள், அல்போன்ஸ்சின் பாட்டி வந்து, 'மிஸ்சு... உரலு கேட்டீங்களாம்... எங்க வீட்டில இல்ல; பக்கத்து வீட்டு பாட்டி வைத்திருந்த வெத்தல பாக்கு இடிக்கும் உரலை கேட்டு வாங்கி வந்தேன். பத்திரமாக கொடுத்தனுப்புங்க!' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அல்போன்சை கூப்பிட்டு, பல முறை விசாரித்த பிறகே எங்களுக்குப் புரிந்தது.

'ஓரல் எக்ஸாம்' என்பதைதான், 'மிஸ் ஒரலு கேட்டாங்க' என்று சொல்லி இருக்கிறான். அவங்க பாட்டி உண்மையான உரலதான், பிராஜெக்டுக்கு கேட்டாங்க போல என நினைத்து, பக்கத்து வீட்டில் உரலை கடன் வாங்கி வந்திருக்கிறார். சிரித்து சிரித்து, வயிறே புண்ணாகிவிட்டது எங்களுக்கு!

- பி.எல்சி, செல்லாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us