தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெருங்காய டப்பா...

பெருங்காய டப்பா...

பெருங்காய டப்பா...


PUBLISHED ON : அக் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், 5ம் வகுப்பிலும், என் தம்பி, 2ம் வகுப்பிலும் படித்தபோது, இப்போது போல், விதவிதமான பென்சில் பாக்ஸ்கள் இல்லாத காலம் அது. காலியான, எல்.கே., பெருங்காய டப்பாவும், அண்ணன், அக்கா பயன்படுத்திய பின், உபயோகமற்று, கறுத்து, நசுங்கிப் போன, 'ஜாமென்ட்ரி பாக்ஸ்ம்'தான் எங்களுக்கு, பென்சில் பாக்ஸ். இதுவும் எல்லாருக்கும் கிடைக்காது. அதற்கான ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கும்.

ஒருநாள், எனக்கு முன்பாக பள்ளிக்கு புறப்பட்டு விட்டான் என் தம்பி. நான் பள்ளிக்குள் நுழைந்தபோது, அவனைச் சுற்றி, அவன் வகுப்புத் தோழர்கள் நிற்பதைப் பார்த்து, என்னவோ ஏதோ என்று பயந்து அருகில் சென்று பார்த்தேன்.

'நான் புதுசா ஒரு பென்சில் டப்பா வச்சிருக்கேன்' என்றபடி, பைக்குள்ளிருந்து வெளியே எடுத்துக் காட்டினான். அதைப் பார்த்து எல்லாரும் கை கொட்டிச் சிரித்தனர். என் தம்பி, 'பென்சில் டப்பா' என்று காட்டியது, எங்கள் பாட்டியின் வெள்ளி வெற்றிலைப் பெட்டி. அதற்குள் பென்சில், பலப்பம் இருந்தது.

மாலையில் நாங்கள் வீடு திரும்பிய போது, வெள்ளி வெற்றிலைப் பெட்டி காணாமல் போய் விட்டதென்று வீடே அதிர்ந்திருந்தது. உண்மை தெரிந்த பிறகு, எல்லாரும் என் தம்பியை கேலி செய்ய, வெட்கத்தால் அசடு வழிந்தான்.

'வெற்றிலைப் பெட்டி' என்ற பட்டப் பெயராலேயே அழைக்கப்பட்டான் என் தம்பி. இப்போது அவன் பிள்ளைகளுக்கு, விதவிதமான பென்சில் பாக்ஸ்கள் வாங்கித் தருகிறான். ஆனாலும், இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு அதன் அருமை புரிகிறதா என்ன?

- என்.ரங்கநாயகி, கோயம்புத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us