தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உடற்கல்வி!

உடற்கல்வி!

உடற்கல்வி!


PUBLISHED ON : டிச 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்' என்பது, திருமந்திரம் அருளிய, திருமூலர் வாக்கு. உடற் கல்வி, உடல், அறிவு, மன வளத்தை மேம்படுத்தும். ஊக்கம், சுயக்கட்டுப்பாட்டு போன்ற, அரிய பண்புகளை வளர்க்கும்.

உடல் கல்வியால், விளையாட்டு விதிமுறைகளையும், நுணுக்கங்களையும் கற்கலாம். பயிற்சியும் பெறலாம். உடலை உணர்ந்து செயல்படும் ஆற்றலை பெறலாம். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடலாம்.

சுவர் இருந்தால் தானே, சித்திரம் வரைய முடியும். பிள்ளைகளுக்கு, வெறுமனே படிப்பை மட்டுமே கொடுப்பதால் ஆரோக்கியம் குறையும். உடல் வலிமையுடன் இருந்தால் தான், வாழ்க்கையில் முன்னேற முடியும்.

சுவாமி விவேகானந்தர், 'பலம் உள்ளவர்களாய் திகழுங்கள்; அதுவே, உங்களுக்கு அளிக்கும் அறிவுரை...' என்கிறார். நல்ல பாத்திரத்தில் வைத்தால் தான், பால் கெடாமல் சுவைக்கும். உயிரும், நல்ல உடலுக்குள் இருந்தால் தான், வாழ்வு சிறக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us