PUBLISHED ON : ஜூலை 26, 2019

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 300 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
கறுப்பு எள் - 50 கிராம்
வெல்லப் பொடி - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் உப்பு கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். வேர்க்கடலை மற்றும் எள்ளை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த கேழ்வரகு மாவுடன், வேர்கடலை, எள் மற்றும் வெல்லப்பொடியை சேர்த்து கிளறவும். சுவையான, சத்துமிக்க பாரம்பரிய கேழ்வரகு புட்டு தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உணபர்.
- வி.உஷா வேல்முருகன், காஞ்சிபுரம்.
