PUBLISHED ON : மே 23, 2020

புரந்தர் கோட்டை, மகாராஷ்டிரா மாநிலம், புனா நகர் அருகே உள்ளது. போர்களால் சிதைந்த போதும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இந்தியாவின் மத்திய பகுதியான தக்காணத்தை ஆண்ட பாமினி சுல்தான்கள், புரந்தர் கிராமப் பகுதியில், 14ம் நுாற்றாண்டில் இந்த கோட்டையைக் கட்டினர்.
கடல் மட்டத்தில் இருந்து, 4472 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மராட்டிய பேரரசின் முக்கிய ஆட்சி மையமாக திகழ்ந்தது. பேரரசர் சிவாஜியின் மகன் சம்பாஜி இங்கு தான் பிறந்தார். பின், மொகலாய மன்னர் அவுரங்கசீப் இதை கைப்பற்றினார்.
சிறப்பு மிக்க இந்த கேட்டையில், இந்தியாவின் மத்திய பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாற்று பதிவுகள் நிறைந்துள்ளன. ராஷ்டிரகூடர், சாளுக்கியர், யாதவ மன்னர்களின் ஆட்சி காலங்களில் இந்த பகுதியில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன.
புரந்தர் கேட்டை, போர்களால் சிதைத்து சின்னா பின்னமாகியது. ஆனாலும் அழியாமல், வரலாற்றை பறைசாற்றி நிற்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு, சுற்றுலா இடமாக விளங்குகிறது. பாரா கிளைடிங் மற்றும் மலையேற்ற பயிற்சி செய்வோருக்கு உகந்த இடமாக தற்போது உள்ளது.
