PUBLISHED ON : நவ 20, 2021

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 250 கிராம்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 7
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது, நல்லெண்ணெய், தண்ணீர் - சிறிதளவு
கொத்துமல்லி இலை, புதினா, கிராம்பு, பட்டை, உப்பு,பிரியாணி இலை - தேவையான அளவு.
செய்முறை:
வரகு அரிசியை நன்றாக கழுவி, கால் மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில், எண்ணெய் காய்ந்ததும், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, நறுக்கிய தாக்காளி, வெங்காயத்தை நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதும் சேர்க்கவும்.
அதனுடன் ஊறிய வரகு அரிசி, தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைத்து, நறுக்கிய கொத்துமல்லி இலை, பச்சை மிளகாய், புதினா இலை சேர்த்து கிளறி இறக்கவும். சத்து நிறைந்த, 'வரகு கஞ்சி!' தயார்.
அனைவரும் விரும்பிக் குடிப்பர்.
- தெய்வானை செல்வராஜ், பழநி.
