தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓடி விளையாடுங்க...!

ஓடி விளையாடுங்க...!

ஓடி விளையாடுங்க...!


PUBLISHED ON : ஜூலை 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விரும்பி ஆடுவதே விளையாட்டு. மனம் விரும்பி ஆடினால், சுறுசுறுப்பை தரும்; உடலையும், மனதையும் வலிமையாக்கும்; ரத்தத்தை சுத்திகரிக்கும்; உற்சாகத்தை வரவழைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

விளையாட்டு போட்டிகள் பல தளங்களில் நடத்தப்படுவதால், உலக அளவில் நட்புறவுக்கு பாலமாகும்.

விளையாட்டின் பயன்கள்:

* ஈட்டி எறிதல், துப்பாக்கி சுடுதல் - பார்வை திறனை அதிகரிக்கும்

* வட்டு எறிதல், குண்டு வீசுதல், எடை துாக்குதல் - கை, கால், தோள், மார்பு பகுதிகளை பலப்படுத்தும்

* ஓட்டம், நீச்சல் - ரத்த ஓட்டத்தை துாண்டி சுறுசுறுப்பை தரும்

* உயரம் தாண்டுதால் - கால், இடுப்பு சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

இப்படி, ஒவ்வொரு விதத்தில், உடலுக்கும், மனதுக்கும் பலன் தருகிறது விளையாட்டுகள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும். ஆனால், கணினியில் தானே அதிகமா ஆடுறீங்க... அது கண்களுக்கும், உடலுக்கும் சோர்வைத்தான் தரும்; அதை தவிருங்கள்.

குட்டீஸ்... நீங்க சுறுசுறுப்பு மிக்க சாதனையாளராக வேண்டாமா... ஏதாவது, ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து ஆடுங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us