PUBLISHED ON : ஜூலை 19, 2019

அங்கன்வாடி பள்ளியில், பாலசேவிகரவாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக் காலத்தில், பால்வாடி வகுப்பறையில், சிறுவர்மலர் இதழை எப்போதும் வைத்திருப்பேன். அதில் வெளிவரும், குதிரை, யானை படங்களைக் காட்டி, அந்த விலங்குகள் போல் நடிப்பேன். குழந்தைகள் குதுாகலிப்பர்.
முகமூடி அணிந்து, தத்ரூபமாக கதைகள் சொல்வேன். மாயக் குதிரை, 'டக்... டக்...' என, ஓடுவது போல், நடித்துக் காட்டுவேன். அழுது, அடம் பிடிக்கும் குழந்தைகளும், வாய் பிளந்து பிரமித்து கவனிப்பர்.
என் நடிப்பில் கிறங்கி, அனைத்து குழந்தைகளும் தவறாமல், வகுப்புக்கு வந்தனர். சமூக நலத்துறை அதிகாரிகள் வியந்து, நற்சான்று அளித்து பாராட்டினர்.
தற்போது வயது, 78; என் பணிக்கு உதவிய, சிறுவர்மலர் இதழ் பாதுகாக்கப் பட வேண்டிய, அரிய பொக்கிஷம்!
- எம்.ஆர்.சாரதாம்பாள், சென்னை.
தொடர்புக்கு: 95001 52195
