தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி! (6)

விஞ்ஞானி! (6)

விஞ்ஞானி! (6)


PUBLISHED ON : மே 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 'ஹாம்பர்க்' நகரில் ஹென்னிங் பிராண்ட் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் வியாபாரத்தில் நிறையப் பணம் சேர்த்து வைத்திருந்தார். அத்துடன் அவர் திருப்தியடைந்திருக்கலாம். ஆனால், மேலும் நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதுவே பெரிதாக வளர்ந்து அவரைப் பிடித்து ஆட்டியது.

கல்லையும் தங்கமாக்கும் ரசவாதக் கலையில் தேர்ச்சி பெற்று நிறையத் தங்கக் கட்டிகளை உற்பத்தி செய்து பெரிய கோடீஸ்வரனாகி விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அலைந் தார். எங்கெங்கோ போனார். யாரை யெல்லாமோ சந்தித்தார். பெரிய, பெரிய நூல் நிலையங்களுக் கெல்லாம் சென்று வேதியியல் சாஸ்திர நூல்களையெல்லாம் படித்தார்; குறிப் பெடுத்தார். இப்படியே சில ஆண்டுகள் சென்றன.

வர்த்தக வட்டாரப் பேச்சுகளில் அவரது பெயர் அடிபடுவது கொஞ்ச கொஞ்சமாகக் குறைந்து போயிற்று.

இதற்கிடையில் ஹென்னிங் பிராண்ட் கல்லையும், மண்ணையும் தங்கமாக்கும் ரசவாதக் கலையின் நுணுக்கங்களை ஓரளவுக்குக் கற்றுக் கொண்டதாக எண்ணி, தன் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டு கல்லையும், மண்ணையும், இரும்பையும், செம்பையும் தனித்தனிக் குடுவையில் இட்டு பல்வேறு மூலிகைகளையும், வேர்களையும், தாது உப்புகளையும், ரசாயனப் பொருள் களையும் சேர்த்துக் காய்ச்சியும், வடித்தும், சலித்தும், புடைத்தும், கரைத்தும் புடமிட்டும் பார்த்தார். பலன் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் கைகளிலும் ஏதேதோ அமிலங்களும், காரங்களும் பட்டு ஆறாத புண்கள்தான் ஏற்பட்டன.

ஆண்டுகள் பல கடந்தன. கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. ஆனால், அவருடைய ரசவாதச் சோதனை மட்டும் வெற்றி பெறவேயில்லை.

ஆனாலும், அந்த வியாபாரி அத்துடன் நிறுத்திக் கொள்வதாக இல்லை. தன் வீடு, வாசல், வாகனங்களையெல்லாம் விற்று தன் ஆராய்ச்சிக்கே செலவிட்டார். இப்படியாகவே இருந்த சொத்தெல்லாம் தீர்ந்து விட்டது. ஹென்னிங் பிராண்ட் வறுமை நிலைக்கு ஆட்பட்டார். இறுதிவரை அவருடைய ரசவாதச் சோதனை வெற்றி பெறவேயில்லை. தங்கம் மட்டுமல்ல, வெள்ளி கூட உருவாக வில்லை.

அவரைப் பல்வேறு நோய்களும் பற்றிக் கொண்டன. அப்போதும் அவர் எஞ்சியிருந்த சில தனிமங்களை ஒரு குடுவையில் போட்டுக் கரைத்துக் கொண்டுதான் இருந்தார்.

ஒருநாள் மாலையில் அந்த முன்னாள் வியாபாரியை அதிர்ஷ்ட தேவதை தேடி வந்தாள். அவரது அறையிலிருந்த ஒரு குடுவையின் அடியில் பனி போன்ற வெண்மை யான ஒரு பொருள் படிந்திருந்தது. அந்தப் பொருளில் காற்றுப் பட்டதும் வேகமாக எரிந்தது.

அதிலிருந்து வெளிப்பட்ட கனத்த புகை அவரது மூச்சை அடைப்பது போன்றிருந்தது. அதே சமயம், அந்தப் பொருள் இருளிலும் ஒளி வீசியது. குளுமையான அந்த ஒளியில் அவரால் புத்தகத்தைக் கூடப்படிக்க முடிந்தது. அது என்ன பொருள் தெரியுமா?

அதுதான் 'பாஸ்பரஸ்!' தங்கத்தைத் தேடி, தணியாத ஆர்வத்தோடு ஆண்டுக்கணக்கில் சோதனையில் ஈடுபட்டு எண்ணற்ற தொல்லை களைத் தாங்கிக் கொண்ட ஹென்னிங் பிராண்டுக்குக் கடைசியாக அகப்பட்டது பாஸ்பரஸ் என்ற தனிமம்தான்!

இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதுதான் பாஸ்பரஸ்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us