தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி! (7)

விஞ்ஞானி! (7)

விஞ்ஞானி! (7)


PUBLISHED ON : மே 23, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

டாவன் போர்ட் என்ற விஞ்ஞானி மின்காந்த சாதனம் ஒன்றை உருவாக்கி ஆய்வுப் பணிகளைத் தொடர விரும்பினார். அதற்குப் பட்டுத் துணி ஒன்று தேவைப்பட்டது. மின்காந்த சாதனத்தின் கம்பிச் சுருள்மீது சுற்றுவதற்குப் பட்டுத் துணி அவசியமாக இருந்தது. அதைப் புதிதாக வாங்க அப்போது அவரிடம் போதுமான பொருளா தார வசதி இல்லை. என்ன செய்வதென்று யோசித்தார்.

திடீரென்று அவருடைய விஞ்ஞான மூளையில் ஒரு யோசனை பளிச்சிட்டது. உடனே வீட்டுக்குள் சென்று தம் மனைவியுடன் குழைந்து, குழைந்து பேசினார்.

''அன்பே! உன் அம்மா வீட்டுக்குப் போக வேண்டும் என்று பல நாள் களாகச் சொல்லிக் கொண்டிருந் தாயே? இன்றைக்கு வேண்டு மானால் போய் விட்டு வாயேன்,'' என்றார் டாவன் போர்ட்.

அதைக்கேட்டு மகிழ்ச்சி யடைந்த அவருடைய மனைவி, ''அப்பாடா! இன்றாவது உங்களுக்கு அந்த நினைப்பு வந்ததே!'' என்று கூறிவிட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் புறப்பட்டு விட்டார்.

அவர் எப்போது வீட்டை விட்டு வெளியே போவார் என்று பார்த்துக் கொண்டேயிருந்த டாவன் போர்ட், தன் மனைவி, வீட்டுப்படியிறங்கித் தெருவில் காலடியெடுத்து வைத்ததும் விரைவாக வீட்டுக்குள் ஓடினார். அலமாரியில் இருந்த துணிவகை களை நோட்டமிட்டார். அவற்றில் இருந்த மனைவியின் பட்டாடை ஒன்றை எடுத்துக்கொண்டு மின்காந்த தாமிரக் கம்பிச் சுருள்மீது சுற்றினார். சோதனையைத் தொடர்ந்தார். சோதனை வெற்றி பெற்றது. அதற்குள் அவர் பெற்ற வேதனைகள் தான் எத்தனை எத்தனை?

குட்டீஸ் விஞ்ஞானி ஆவதுன்னா அவ்வளவு லேசான காரியமா என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us