தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விதை, தேவையில்லை வளருவேன்டா....!

விதை, தேவையில்லை வளருவேன்டா....!

விதை, தேவையில்லை வளருவேன்டா....!


PUBLISHED ON : ஜூன் 14, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூக்கள் மற்றும் விதைகள் இல்லாமலேயே பல தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. அதோடு சில விதை தாவரங்கள், இரு வழியில் இன விருத்தி செய்கின்றன. சில தாவரங்களில் புதிய சிறிய செடி, தாய் தாவரத்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து புறப்படுகிறது. சில தாவரங்களோ இலைகளிலிருந்து கிளம்பு கிறது. வேறு சில தாவரங்களில் புதிய சந்ததியின் தாவரம் அதன் பூமிக்கடியில் தண்டிலிருந்து கிளம்புகிறது. சில தாவரங் களில் புதிய இனம் கிழங்குகளில் இருந்து கிளம்புகிறது.

ஒரு தாவரம் விதைகள் இல்லாமலும் இனப்பெருக்கம் செய்யமுடியும். காரணம், அது போன்ற தாவரங்களில் செல்கள் தகுதி பெறாமல் இருக்கின்றன. இதுபோன்ற தகுதி பெறாத தாவரங்களின் வெற்று செல்கள் சரியான சூழலில் பலவாக வகுத்து பிரிய தொடங்குகின்றன. இவைகளின் பிரிவில் உருவான செல்கள் சிறப்பான செல்களாக வளர்ச்சியுற்று, முழு தாவரமாக மாறுகிறது.

விதைகள் இல்லாமல் எந்த வகையிலும் இனப்பெருக்கம் பெறும் புதிய தாவரம், தாய் தாவரத்தில் என்னென்ன ஜீன்கள் இருக் கின்றனவோ அவற்றை எல்லாம் பெற்றி ருக்கும். இது போன்ற தாவரங்களில், பூக்கள் மற்றும் விதைகள் உற்பத்திக்கு ஆகும் சக்தி செலவு, தாய் தாவரத்தில் இருந்து கிளம்பும் குட்டி தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆனால், வேறு சில குறைபாடுகளும் பூ மற்றும் விதைகள் இல்லாமல் இனப் பெருக்கம் அடையும் தாவரங்களில் உண்டு. இவை தாய் தாவரத்திலிருந்து வெகு தூரத்திற்கு வளர்ச்சி அடைய முடியாது. எல்லா தாவரமும் ஒரே போலவும், ஒரே இடத்திலும் இருப்பதால் இது போன்ற தாவரங்களால் சூழ்நிலை மாற்றங்களை தாக்கு பிடிக்க முடிவதில்லை.

மொட்டுகள் புதிய செடிகள் ஆகின்றன...

ஸ்டோன்கிராப் என்னும் தாவரத்தின் பல வகைகளில் அவற்றின் இலைகளின் ஓரங்களில் புதிய நுண்ணிய தாவரங்கள் புறப்படுகின்றன. குட்டி தாவரங்கள், குட்டி இலைகள் மற்றும் வேர்களை வளர்த்தபின் தரையில் விழுகிறது. சில சமயம் காற்று அடிக்கும் வேகத்தை பொறுத்து விழும்போது காற்றால் சற்று தொலைவிற்கும் எடுத்து செல்லப்படும். ஒவ்வொரு புதிய தாவரமும் ஜீன் குணப்பாடுகளில் தாய் தாவரத்தை அப்படியே ஒத்திருக்கும்.

ஸ்டோன்கிராப் அல்லது செடம்: முதன் முதலில் வளர்ச்சியுற்றது ஆசியாவில்தான். இப்போது இந்த தாவரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பிரபலமான தாவரமாக உள்ளது. பாறை தோட்டங்களில் இவை அழகிற்கு வளர்க்கப் படுகிறது.

தரையில் பரவுதல்!

பல தாவரங்கள் மிக மெல்லிசான தண்டுகளை வளரச் செய்யும். அவை தரையில் பரவும். அந்த தண்டுகள் தரையை தொட்டவுடன் அங்கிருந்து வேர் பிடித்து புதிய இலைகளை புறப்படச் செய்யும்.

ஸ்டிராபெர்ரிக்கள் மெல்லிய தண்டு களை தரைக்கு அனுப்பி அதன் மூலம் புதிய தாவரங்களை இனப்பெருக்கம் செய்யும்.

இந்த அல்லி தாவர வகை நுண்ணிய மொட்டுக்களை தனது இலைகளின் நுனியில் வளரச் செய்கிறது. ஒவ்வொரு மொட்டும் முழுமையான புதிய தாவரமாக வளரும்.

பூமிக்கடியில் பரவுதல்

சில தாவரங்கள், பூமிக்கடியில் பரவும். வெங்காயம், போன்ற தாவரங்கள் உணவை பூமிக்கடியில் சேகரித்து, பூமியின் மீது புதிய கிழங்கு மொட்டுக்களை வளரச் செய்யும். பூமிக்கடி தண்டு எனப்படும் வேர்த்தண்டு மற்றும் உப்பிய தண்டுகள் என பூமிக்கடியில் இருக்கும் இவற்றில் இருந்து புதிய தாவரங்கள் இனப்பெருக்கம் செய்யும். இப்படி வளர்வதை கார்ம் என்பர்.

மரவள்ளி கிழங்கு, சேனை கிழங்கு ஆகியவற்றில் புதிய மொட்டுகள் தண்டுகளின் ஊடே வளரும். ஒவ்வொரு மொட்டும் வேர் பாய்ச்சி, இலை வளர்த்து இதன்மூலம் முழுமையான தாவரமாக வளர்ச்சியுறும். மற்றொரு அல்லி வகை நுண்ணிய கிழங்குகளை தனது இலைகளின் அடியில் வளர செய்யும். ஒவ்வொரு குட்டி கிழங்கும் முழு தாவரமாகும்.

உருளைக்கிழங்கு தாவரம் உணவினை பூமிக்கடியில் உள்ள கிழங்கிலிருந்து கிளம்பும் தண்டுகளில் சேகரிக்கின்றன. நுண்ணிய தாவரங்கள் அல்லது கண்கள் எனப்படுபவை பூமியிலிருந்து துளர்கின்றன. தூலிப் தாவரம் -கிழங்கு மொட்டு, அதாவது ஒருவகை பூமிக்கடியில் உள்ள மொட்டி லிருந்து வளர்ச்சியுறுகிறது. புதிய இலைகள் மொட்டை சுற்றி வளர் கிறது. கிழங்கு மொட்டுகள் விரிச லுற்று புதிய குட்டி கிழங்கு மொட்டு களை கிளம்ப செய்கின்றன.

வாள் போன்ற இலைகளை கொண்ட தாவரங்கள் தடிமனான பூமிக்கடி தண்டுகளை வளர்க்கின்றன. அதோடு மேலும் புதிய தாவரங் களும் இதில் கிளம்பும். மூங்கில் மற்றும் பிற புல் வகைகள் பூமிக்கடி வேர் தண்டுகளின் மூலம் மிக வேகமாக பல்கிப் பெருகுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us