தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடவுளைக் காட்டு!

கடவுளைக் காட்டு!

கடவுளைக் காட்டு!


PUBLISHED ON : மே 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

ரோம சக்கரவர்த்தி ஹட்ரியன், யூத மதகுரு ஜாஸ்வா என்பவரை அழைத்து, 'கடவுளைக் காண விரும்புகிறேன்; அவரைக் காட்டு...' என்றார்.

'அது முடியாத ஒரு காரியம்; அவரைப் பார்க்கக் கூடாது...' என்றார், மதகுரு. 'பார்த்தே ஆக வேண்டும்' என, சக்கரவர்த்தி அடம்பிடித்தார்.

அது கோடைகாலம். சக்கரவர்த்தியை வெளியே அழைத்துச் சென்ற மதகுரு, 'அண்ணாந்து சூரியனைப் பாருங்கள்...' என்றார்.

'அது கஷ்டமான காரியம்; முடியாது...' என்றார் சக்கரவர்த்தி.

'இறைவனால் ஆக்கப்பட்டது தான் சூரியன்; அதையே பார்க்க இயலவில்லை என்றால், இறைவனை எப்படி பார்க்க முடியும்...' என்றார் மதகுரு. அமைதியானார் சக்கரவர்த்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us