
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிரிக்காவை பூர்வீகமாக உடைய ஒரு நத்தை இனம், இந்தியாவில் பல்கி பெருகிவருகிறது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆய்வாளர் வில்லியம் ஹென்றி பென்சன். இவர் மொரிஷியஸ் தீவிலிருந்து ஒரு ஜோடி நத்தைகளை, 19ம் நுாற்றாண்டில் இந்தியா கொண்டு வந்தார். இது ஆண்டுக்கு 500 முட்டைகள் வரை இடும். இப்போது பல்கி பெருகி பயிர்களை அழிக்கிறது. விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு, ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்களில் ஒன்றாக இதை பட்டியலிட்டு உள்ளது. இது கள்ளிச் செடி, வாழை உள்ளிட்ட தாவரங்களை உண்ணும். மதுரையில் வாழைத் தோட்டங்கள் இந்த நத்தையால் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சமநிலையை பாதிப்படைய வைக்கும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆப்பிரிக்க நத்தை.
- வி.திருமுகில்

