PUBLISHED ON : ஏப் 04, 2026

தேவையான பொருட்கள்:
கேரட் - அரை கிலோ
சர்க்கரை - கால் கிலோ
பால் - அரை
லிட்டர்
வறுத்த முந்திரி, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - தலா 10
தேங்காய்
துருவல், கோதுமை மாவு - தலா 2
தேக்கரண்டி நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
குக்கரில் பேரீச்சம் பழம், கேரட் துருவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைக்கவும். பால்கோவா பதத்திற்கு பாலை சுண்ட காய்ச்சவும்.
நெய் விட்டு கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்க்கவும். பாகு பதத்திற்கு வரும் போது கேரட் விழுது, பால், கோதுமை மாவு சேர்த்து, அடிபிடிக்காமல் கெட்டியாக கேசரி பதம் வரும் வரை கிளறவும். அதில், வறுத்த முந்திரியை துாவி இறக்கினால், சத்து நிறைந்த, கேரட் கேசரி தயார்.
மாலை சிற்றுண்டியாக குழந்தைகள் விரும்பி உண்பர்.
- பெ.சரஸ்வதி, துாத்துக்குடி.
