PUBLISHED ON : செப் 20, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் பெயர் க.நந்தனா. நான் பொள்ளாச்சி அரசு பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். அனைத்து பாடங்களையும் சிறப்பு பாடமாக படித்து வருகிறேன்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதிலிருந்து இப்போது வரை சிறுவர்மலர் தொடர்ந்து படித்து வருகிறேன்.
‛சிறுகதைகள், மொக்க ஜோக்ஸ், உங்கள் பக்கம், இளஸ் மனஸ்' பகுதிகள் மகிழ்ச்சியையும், அறிவுறைகளையும் வழங்குகின்றன. ‛ஸ்கூல் கேம்பஸ்' மூலம் பழைய கால கல்வி முறையை அறிய முடிகிறது.
சிறுவர்மலரில் வெளிவரும் அனைத்து பகுதிகளும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ‛சிறுவர்மலர்' எழுதவும், படிக்கவும் வழிகாட்டுகிறது. அதற்கு மிக்க நன்றி!
க.நந்தனா
6ம் வகுப்பு,
ரெட்டியாரூர் ந.க.நா.க., மேல்நிலைப் பள்ளி,
பொள்ளாச்சி.

