தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கண்டிப்பும், கருணையும்!

கண்டிப்பும், கருணையும்!

கண்டிப்பும், கருணையும்!


PUBLISHED ON : மார் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2003ல், 9ம் வகுப்பு சேர்ந்தேன். எங்கள் வகுப்பாசிரியை ராஜேஸ்வரி, கண்டிப்பானவர்; அதே நேரத்தில் கருணையே உருவானவர்.

ஒருநாள், ஆங்கில வகுப்பின் போது, பக்கத்து மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை வகுப்பாசிரியை பார்த்துவிட்டார். 'வகுப்பு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய். நாளை உன் பெற்றோரை அழைத்து வா. இன்று வகுப்பு முடியும் வரை வெளியில் நில்...' என உத்தரவிட்டார்.

வகுப்பறையின் வெளியே நின்று, அழுது கொண்டிருந்தேன். வகுப்பு முடிந்து வெளியே வந்த வகுப்பாசிரியை, என்னை அழைத்து சென்று, முகத்தை கழுவி, துடைத்து விட்டார்.

'என் அப்பா, சென்னையில் வேலை பார்ப்பதால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் வருவார். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டுவேலைகளை நான் தான் செய்து, பள்ளிக்கு வருகிறேன்...' என, என் நிலையை அவரிடம் கூறினேன்.

'கஷ்டப்படும் சூழ்நிலையில் உள்ள நீ, பொறுப்பில்லாமல் விளையாட்டுத் தனமாக இருக்கலாமா... இனி, நீ நன்றாக படிக்க வேண்டும். வீட்டு வேலைகளை முடித்து, நேரம் கிடைக்கும் போது, என் வீட்டுக்கு வா. உனக்கு பாடம் சொல்லி தருகிறேன்...' என்றார்.

நானும் அவர் வீட்டுக்கு சென்று படித்து, அந்த ஆண்டில், வகுப்பிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.

தற்போது என் வயது 37. பட்டமேற்படிப்பு முடித்து, தற்போது சென்னையில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் உள்ளேன். என் குடும்பம் நல்ல நிலைக்கு வருவதற்கு உதவிய ஆசிரியை ராஜேஸ்வரிக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

- பி.மரகதவள்ளி, சென்னை. தொடர்புக்கு: 98406 17672

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us