
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
சீரகம், மல்லி கீரை, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, முருங்கைக் கீரை, கம்பு மாவு, மஞ்சள் துாள், மிளகாய் துாள், தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சை மிளகாய், கொத்த மல்லி,கறிவேப்பிலையை பொடியாகவும் நறுக்கவும். இவற்றுடன், கேழ்வரகு மாவு, துருவிய இஞ்சி, சீரகம், முருங்கைக் கீரை, மஞ்சள் துாள், மிளகாய்துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும்.
அரைமணி நேரம் ஊறிய பின், சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவை மிக்க, 'கேழ்வரகு பக்கோடா' தயார்! அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.