PUBLISHED ON : செப் 28, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
தளிர் முருங்கைக்கீரை - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 5
பூண்டு பல் - 4
உளுந்தம் பருப்பு, புளி, உப்பு, கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் சூடானதும், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பின், சின்ன வெங்காயம், பூண்டு பல், முருங்கைக்கீரை மற்றும் புளி சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்.
சத்துகள் நிறைந்த, 'முருங்கைக்கீரை துவையல்!' தயார். சூடான சாதம், இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- எஸ்.மாரிமுத்து, சென்னை.