
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
ஓமவல்லி இலைகள் - 10
கடலை மாவு - 200 கிராம்
பெருங்காய துாள், மிளகாய் துாள்,
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கடலை மாவில், உப்பு, பெருங்காய துாள், மிளகாய் துாள் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். சுத்தம் செய்த ஓமவல்லி இலைகளை அதில் போடவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும், மாவில் தோய்ந்த ஓமவில்லி இலைகளை தனித்தனியே பெரித்து எடுக்கவும்.
சுவைமிக்க, 'ஓமவல்லி பஜ்ஜி' தயார். மாலை நேர சிற்றுண்டியாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- ஜனா பாலா முருகன், திருப்பூர்.