sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பகிர்ந்து உண்!

/

பகிர்ந்து உண்!

பகிர்ந்து உண்!

பகிர்ந்து உண்!


PUBLISHED ON : மார் 15, 2025

Google News

PUBLISHED ON : மார் 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார், ஊரீசு உயர்நிலைப் பள்ளியில், 1950ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

அன்று பள்ளியில் முற்பகல் வகுப்பு இடைவேளையில் மரத்தடியில், சக மாணவர்களுடன் பேசியபடி அமர்ந்திருந்தேன். அப்போது, வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த தின்பண்டங்களை யாருக்கும் தராமல் கொரித்தேன்.

அவ்வழியாக வந்த வகுப்பாசிரியர் சி.ஏ.சாமுவேல் அழைத்து, 'நண்பர்கள் சூழ்ந்திருக்க நீ மட்டுமே உண்ணுவது நல்ல பண்பல்ல... அதோ காக்கைகள்... கிடைப்பதை தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து பகிர்ந்து உண்பதை பார். அத்தகைய நற்பண்புகளை வளர்த்துக் கொள்...' என அறிவுரை கூறினார். மனதில் அது பதிந்தது. கூட்டத்தில் இருக்கும் போது தனியாக உண்ணும் பழக்கத்துக்கு விடை கொடுத்தேன்.

என் வயது, 91; ராணிப்பேட்டை, பாரி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் அந்த நல்லாசிரியர் வழங்கிய அறிவுரையை பின்பற்றி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டேன். பகிர்ந்துண்ணும் பழக்கத்தை தவறாமல் இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.



- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, சென்னை.

தொடர்புக்கு: 97519 40333







      Dinamalar
      Follow us