
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனுக்குப் பல விஷயங்களை, பிற உயிரினங்கள் கற்றுத்தருகின்றன. அது பற்றி பார்ப்போம்...
* பகிர்ந்து உண்ணும் உயர்ந்த பழக்கத்தை கற்றுத்தருகிறது காகம்
* கடின முயற்சியால் கட்டிய வலை, அழிக்கப்பட்டாலும் மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கிறது சிலந்தி. தோல்வி ஏற்பட்டாலும் துவண்டுவிடக்கூடாது என்பதை கற்றுத் தருகிறது
* ஒற்றுமை, ஒழுக்கம், சீரமைப்பு, கடின உழைப்பை கற்றுத்தருகிறது தேனீ. ஒரு அரசு இயங்குவதை போல இணைந்து வேலை செய்கிறது
* நட்பின் இலக்கணத்துடன் நன்றி, அர்ப்பணிப்புடன் வாழ்கிறது நாய்.- வளர்ப்பவருக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறது.
உயிரினங்களிடம் இருந்து நல்ல பண்புகளை கற்போம்.
- சவுமியா சுப்ரமணியன்