
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
துாதுவளைக்கீரை - 1 கப்
பச்சரிசி - 2 கப்
மிளகு, சீரகம்,
பெருங்காயம், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
பாசிப்பருப்பு, வெந்தயம் --
சிறிதளவு.
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து வேக வைக்கவும். அதில், மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், துாதுவளைக்கீரை கலந்து கிளறி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவை மிக்க, 'துாதுவளைக்கீரை கஞ்சி' தயார். சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- எஸ்.விஜயன், கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு: 82482 53326