
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவ தாவரங்களில் தொட்டால் சிணுங்கிக்கு தனி சிறப்பு உண்டு. இது, மனிதனின் குணத்துடன் ஒப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் மிமோசா பியூடிகா. தொட்டால் சுருங்கி, இலச்சகி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை, ஆள் வணங்கி என்ற பெயர்களும் உண்டு.
மற்ற தாவரங்களை போன்றே இதன் இலையும் செல்களின் சேர்க்கையால் ஆனது. இலைக்குள் இருக்கும் செல்கள் ஒருவகை திரவத்தைக் கொண்டிருக்கும்.
இலையைத் தொட்டவுடன் தாவரத்தின் தண்டுப் பகுதியில் வினோத அமிலம் சுரக்கும். உடனே, இலையின் அடிப்பகுதியில் திரவத் தன்மை நீங்கி விடும். மேற்பகுதியில் அது நீங்குவது இல்லை. இதனால், எடையில் மாறுபாடு ஏற்பட்டு இலை சுருங்கும். இதையே தொட்டவுடன் அது சுருங்கி விடுவதாக கூறுகிறோம்.
- பி.சி.ரகு