
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டை கடலை, மக்காசோளம் - தலா, 1 கப்
சின்ன வெங்காயம் - 2
மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய், எண்ணெய், பெருங்காய பொடி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளை கொண்டை கடலை, மக்காசோளத்தை தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறியதும், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, கொர கொரப்பாக அரைக்கவும். அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், பெருங்காய பொடி கலந்து பிசையவும்.
அந்த மாவை வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவை மிக்க, 'கொண்டை கடலை வடை!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்!
- ப்ரகதா நவநீதன், மதுரை.