sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு - நன்மை தரும் கீரைகள்!

/

அதிமேதாவி அங்குராசு - நன்மை தரும் கீரைகள்!

அதிமேதாவி அங்குராசு - நன்மை தரும் கீரைகள்!

அதிமேதாவி அங்குராசு - நன்மை தரும் கீரைகள்!


PUBLISHED ON : மார் 30, 2024

Google News

PUBLISHED ON : மார் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கீரை முக்கியமானது. அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல நோய்களை தடுக்கும் மருந்தாகவும் அமையும். கீரை மற்றும் அவற்றின் பயன்களை பார்ப்போம்...

முளைக்கீரை: இருமலை நீக்கும். பசியை உண்டு பண்ணும்; சொறி, சிரங்கு நோய்களை குணமாக்கும். சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாருக்கும் ஏற்றது.

கலவைக்கீரை: இதயத்தை வலுப்படுத்தும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்; எந்த வகை மருந்து உண்டாலும், தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புளிச்சக்கீரை: புளிப்பு சுவை உடையது. கெட்ட கொழுப்பை கரைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்; கல்லீரலை பலமாக்கும்; உடல் சூட்டை தணிக்கும். நாவின் சுவையை மீட்டு தரும்.

குப்பைமேனி: இதன் இலைச்சாறு, வாந்தியை உண்டாக்கி, கோழையை அகற்றும். பசியை துாண்டும்; மூட்டு வலி, தலை வலி, வாத வீக்கத்தை குறைக்கும். மஞ்சளுடன் சேர்த்தரைத்து, முகத்தில் பூசி வர, கரும்புள்ளிகள் மறையும்.

பொன்னாங்கண்ணி: உடலுக்கு அழகை உண்டாக்கும். சருமத்தை பாதுகாக்கும்; மூல நோயை கட்டுப்படுத்தும். மூளைக்கு புத்துணர்ச்சி தரும்; கண் பார்வைக்கு சிறந்தது.

அகத்தி: எலும்பை பலப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும்; ரத்தத்தை சுத்தப்படுத்தும்; உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பித்த மயக்கம் போக்கும்; நினைவாற்றலை அதிகரிக்கும்.

காசினி கீரை: அதிக உயிர்ச்சத்து உடையது. சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவக் கூடியது. உடல் எடை குறைய உதவும்; நீரிழிவை கட்டுப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும்.

சிறுகீரை: அடிக்கடி சாப்பிடலாம். சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை போக்கும். பித்த நோய், சிறுநீர் எரிச்சலை தீர்க்கும்; சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றும்.

பசலைக்கீரை: புது ரத்த உற்பத்தியில் சீராக செயல்படும். சிறுநீர் கடுப்பு, நீரடைப்பு தணிக்கும். மலச்சிக்கலை போக்கும்; கொடி பசலை கீரைச்சாறுடன் கற்கண்டு சேர்த்து பருகலாம்.

பருப்புக்கீரை: வெயில் காலத்துக்கு ஏற்றது. குளிர்ச்சியை தரும்; மலச்சிக்கலை போக்கும்; கல்லீரல் நோய்க்கு மிகவும் சிறந்தது. தாய்ப்பால் அதிகரிக்க செய்யும்.

பிண்ணாக்குக் கீரை: வாய்வு தொல்லையை போக்கும். சிறுநீரக கோளாறை சரி செய்யும். வயிற்றில் தங்கும் மலத்தை வெளியேற்றும்.

மணலிக்கீரை: வயிற்றுப்புண், குடல் புண், செரிமானக் கோளாறை சரி செய்யும். வயிற்றில் இருக்கும் பூச்சியை வெளியேற்றும்; மூளையை பலப்படுத்தும். நினைவாற்றல் அதிகரிக்க உதவும்; மார்புச்சளி விலகும்.

முருங்கை: இரும்புச் சத்து நிறைந்தது. உடலுக்கு வலிமை அளிக்கும். ரத்த சோகையை போக்கும். வயிற்றுப் புண் ஆற்றும்; உடல் சூடு தணிக்கும்; வறட்டு இருமல், மார்புச்சளி, மந்தம் போக்கும்.

துாதுவளை: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும். இருமல், இளைப்பு, சளியை போக்கும்; பெருவயிறு மந்தம் சரியாகும்; செரிமானத்தை சீராக்கும்; கண்நோய் குணமாகும்.

தவசிக்கீரை: ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம் குணமாக்கும். சளித்தொல்லையை அகற்றும்; தொண்டைப் புண் நீக்கும்.

மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்று புண்ணை குணமாக்கும்; உடல் சூட்டை தணிக்கும். சோர்வை போக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வல்லாரை: மூளைக்கு பலம் கொடுக்கும்; 'வெரிக்கோஸ் வெயின்' என்ற நரம்பு பாதிப்பை சரி செய்யும்; பார்வைத் திறனை அதிகரிக்கும்.

அரைக்கீரை: உடலை பலப்படுத்தும். வாத நோயை தடுக்கும்; கபத்தை அறுக்கும்; நரம்புகளை பலப்படுத்தும். மாதவிடாய் பிரச்னையை சீராக்கும்.

எளிதாக கிடைக்கும் கீரை வகைகளை உணவில் சேர்த்து நலம் பெறுவோம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us