PUBLISHED ON : ஜூன் 01, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 65; கூலி வேலை செய்து வாழ்கிறேன். குடும்பத்தில் அனைவரும் விரும்பி படிப்பது தினமலர் நாளிதழ் மட்டும் தான். சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழுக்காக ஆவலோடு காத்திருப்பேன். அதில் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படிப்பேன்.
ஒவ்வொரு பக்கமும் சுவாரசியம் மிக்க தகவல்களால் நிறைந்து உள்ளது சிறுவர்மலர். படிக்கும் ஆர்வத்தை துாண்டி பொது அறிவை வளர்க்கிறது. அக்கம் பக்கத்தவரிடமும் படிக்க சொல்வேன்.
சிறுவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் பயன்படுகிறது சிறுவர்மலர் இதழ். இதை பெரும் பொக்கிஷமாக கருதுகிறேன்.
- த.சிந்தாமணி, கடலுார்.