PUBLISHED ON : அக் 07, 2016

அ நிறம் | அளவு
சில நேரங்களில் அதிரடியாக மேகங்களிலிருந்து மழையோடு மழையாக ஐஸ்கட்டிகள் பந்தாக விழும். அதுவே, 'ஆலங்கட்டி' மழை என்றழைக்கப்படுகிறது. இது பயங்கரமான இடி, மழையின் போதுதான் இவ்வாறு கட்டிகளாகப் பொழியும். காரணம், மேகங்களை இடி தாக்கும்போது மேகம் சிறு கட்டிகளாக, பந்துகளாக உடையும். இது கரையாமல் மழையோடு பூமியை நோக்கிப் பொழிகிறது. இந்தக் கல்மாரி அதிகளவில் விழும்போது பெரும் நாசத்தை உருவாக்கும். Hail stone எனப்படும், 'கல்மாரி' ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில், 1984ல், ஒரு பில்லியன் டாலர் நாசத்தை ஏற்படுத்தியது.
