PUBLISHED ON : ஜூன் 22, 2012

பழவகைகளில் சாத்துக்குடி பழம் என்றாலே இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை, குட்டீஸ்சை மிகவும் விரும்பச் செய்யும். சாப்பிட்டவுடன் உடலுக்கு தேவையான சக்தி உடனே கிடைக்கும். காலையில் ஒரு கப் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால், அன்றைய தினம் சோர்வு, அலுப்பு நீங்கி, உடல் சுறுசுறுப்பு பெறும்; எளதில் ஜீரணமாகும்.
இப்பழத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் இருப்பதோடு, சிட்ரிக் அமிலம் அதிகம் அடங்கியுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த பழமாகும். தினமும் இரண்டு வேளை இதன் ஜூஸை குடித்து வந்தால், உடல் நோய் விரைவில் குணமடையும். இது ரத்தத்தில் எளிதில் கலக்கும் என்பதால், ஜலதோஷம் பிடித்திருக்கும் சமயத்தில் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
ஞாபக சக்தியை அதிகரிப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. ஞாபக மறதி உள்ளவர்கள், பித்த மயக்கம், குமட்டல், வாந்தி வருவது போன்ற உணர்வு உள்ளவர்கள் இப்பழத்தை தினமும் சாப்பிட அதிலிருந்து விடுபடலாம். மேலும், மலச்சிக்கலை விரட்டி யடிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரித்து நோய் குணமடையும்.
